Followers

Monday, June 15, 2026

முருகன் போற்றிகள் 677 to 702

677.ஓம் நடனங்கொள் வேலா போற்றி

678. ஓம் நந்தா விளக்கே போற்றி

679. ஓம் நன்றெல்லாம் அளித்திடும் வேலவா போற்றி

680. ஓம் நக்கீரனைக் காத்து ரக்ஷித்தாய் போற்றி

681. ஓம் நவகிரகங்களின் தலைவனே போற்றி

682. ஓம் நல்லூர் உறையும் நண்பனே போற்றி

683. ஓம் நான்மறை போற்றும் நாயகா போற்றி

684. ஓம் நாக பந்தத்தில் உறைவாய் போற்றி

685. ஓம் நாரணன் மருகா போற்றி

686. ஓம் நாரணனுக்கு பிரியனே போற்றி

687. ஓம் நான்முகனைச் சிறையிட்டாய் போற்றி

688. ஓம் நாத விந்து கலாதீ போற்றி

689. ஓம் நாடாளும் நாயகனே போற்றி

690. ஓம் நாகமலை வாழும் நம்பீ போற்றி

691. ஓம் நாககிரி பெருமானே போற்றி

692. ஓம் நாவலூரிலுறைபவனே போற்றி

693. ஓம் நாகபட்டினத்தின் காவலனே போற்றி

694. ஓம் நாகேச்சரத்து செல்வமே போற்றி

695. ஓம் நித்தியமாய் இருப்பவனே போற்றி

696. ஓம் நிறைமணியாய் திகழ்பவனே போற்றி

697. ஓம் நித்திய சௌபாக்கியமளிப்பவனே போற்றி

698. ஓம் நிலவு முகமுடையோனே போற்றி

699. ஓம் நிமலா போற்றி

700. ஓம் நித்தியம் தொழும் வேலவனே போற்றி

701. ஓம் நிகரற்ற செல்வமே போற்றி

702. ஓம் நிமலருக்கு அருள்வோனே போற்றி




Thursday, June 11, 2026

ஆறாம் திருமுறை - திருத்தாண்டகம் - நினைந்துருகும் அடியாரை

நினைந்து உருகும் அடியாரை நைய வைத்தார்;
 நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்;
சினம் திருகு களிற்று உரிவைப் போர்வை வைத்தார்;
 செழுமதியின் தளிர் வைத்தார்; சிறந்து வானோர்-
இனம் துருவி, மணிமகுடத்து ஏறத், துற்ற
 இனமலர்கள் போது அவிழ்ந்து மதுவாய்ப் பில்கி
நனைந்தனைய திருவடி என் தலைமேல் வைத்தார்-
 நல்லூர் எம் பெருமானார் நல்லவாறே! 1

பொன் நலத்த நறுங்கொன்றை சடைமேல் வைத்தார்;
 புலிஉரியின் அதள் வைத்தார்; புனலும் வைத்தார்;
மன்நலத்த திரள் தோள்மேல் மழுவாள் வைத்தார்;
 வார்காதில் குழை வைத்தார்; மதியும் வைத்தார்;
மின்நலத்த நுண்இடையாள் பாகம் வைத்தார்;
 வேழத்தின் உரி வைத்தார்; வெண்நூல் வைத்தார்;
நன்நலத்த திருவடி என் தலைமேல் வைத்தார்-
 நல்லூர் எம் பெருமானார் நல்லவாறே! 2

தோடு ஏறும் மலர்க்கொன்றை சடைமேல் வைத்தார்;
 துன்எருக்கின் வடம் வைத்தார்; துவலை சிந்தப்,
பாடு ஏறு படுதிரைகள் எறிய வைத்தார்;
 பனிமத்த மலர் வைத்தார்; பாம்பும் வைத்தார்;
சேடு ஏறு திருநுதல் மேல் நாட்டம் வைத்தார்;
 சிலை வைத்தார்; மலைபெற்ற மகளை வைத்தார்;
நாடு ஏறு திருவடி என் தலைமேல் வைத்தார்-
 நல்லூர் எம் பெருமானார் நல்லவாறே! 3

வில் அருளி வரு புருவத்து ஒருத்தி பாகம்
 பொருத்து ஆகி, விரிசடைமேல் அருவி வைத்தார்;
கல் அருளி வரி சிலையா வைத்தார்; ஊராக்
 கயிலாய மலை வைத்தார்; கடவூர் வைத்தார்;
சொல் அருளி அறம் நால்வர்க்கு அறிய வைத்தார்;
 சுடுசுடலைப் பொடிவைத்தார்; துறவி வைத்தார்;
நல்அருளால் - திருவடி என் தலைமேல் வைத்தார்-
 நல்லூர் எம் பெருமானார் நல்லவாறே! 4

விண் இரியும் திரிபுரங்கள் எரிய வைத்தார்;
 வினை, தொழுவார்க்கு அற வைத்தார்; துறவி வைத்தார்;
கண்எரியால் காமனையும் பொடியா வைத்தார்;
 கடிக்கமலம் மலர் வைத்தார்; கயிலை வைத்தார்;
திண் எரியும் தண் புனலும் உடனே வைத்தார்;
 திசைதொழுது மிசை அமரர் திகழ்ந்து வாழ்த்தி
நண்ணரிய திருவடி என் தலைமேல் வைத்தார்-
 நல்லூர் எம் பெருமானார் நல்லவாறே! 5

உற்று உலவு பிணி உலகத்து எழுமை வைத்தார்;
 உயிர் வைத்தார்; உயிர் செல்லும் கதிகள் வைத்தார்;
மற்று அமரர் கணம் வைத்தார்; அமரர் காணா
 மறை வைத்தார்; குறைமதியம் வளர வைத்தார்;
செற்றம் மலி ஆர்வமொடு காம லோபம்
 சிறவாத நெறி வைத்தார்; துறவி வைத்தார்;
நற்றவர் சேர் திருவடி என் தலைமேல் வைத்தார்-
 நல்லூர் எம் பெருமானார் நல்லவாறே! 6

மாறு மலைந்தார் அரணம் எரிய வைத்தார்;
 மணிமுடி மேல் அர வைத்தார்; அணிகொள் மேனி
நீறு மலிந்து எரி ஆடல் நிலவ வைத்தார்;
 நெற்றிமேல் கண்வைத்தார்; நிலையம் வைத்தார்;
ஆறு மலைந்து அறுதிரைகள் எறிய வைத்தார்;
 ஆர்வத்தால் அடி அமரர் பரவ வைத்தார்;
நாறுமலர்த் திருவடி என் தலைமேல் வைத்தார்-
 நல்லூர் எம் பெருமானார் நல்லவாறே! 7

குலங்கள் மிகும் மலை,கடல்கள், ஞாலம், வைத்தார்;
 குருமணி சேர் அர வைத்தார்; கோலம் வைத்தார்;
உலம் கிளரும் அரவத்தின் உச்சி வைத்தார்;
 உண்டு அருளி விடம் வைத்தார்; எண்தோள் வைத்தார்;
நிலம் கிளரும் புனல் கனலுள் அனிலம் வைத்தார்;
 நிமிர் விசும்பின் மிசை வைத்தார்; நினைந்தார் இந்நாள்
நலம் கிளரும் திருவடி என் தலைமேல் வைத்தார்-
 நல்லூர் எம் பெருமானார் நல்லவாறே! 8

சென்று உருளும் கதிர் இண்டும் விசும்பில் வைத்தார்;
 திசை பத்தும் இருநிலத்தில் திருந்த வைத்தார்;
நின்று அருளி அடி அமரர் வணங்க வைத்தார்;
 நிறை தவமும் மறைபொருளும் நிலவ வைத்தார்;
கொன்று அருளிக், கொடுங்கூற்றம் நடுங்கி ஓடக்,
 குரைகழல் சேவடி வைத்தார் விடையும் வைத்தார்;
நன்று அருளும் திருவடி என் தலைமேல் வைத்தார்-
 நல்லூர் எம் பெருமானார் நல்லவாறே! 9

பாம்பு உரிஞ்சி, மதி கிடந்து திரைகள் ஏங்கப்,
 பனிக்கொன்றை சடை வைத்தார்; பணிசெய் வானோர்
ஆம் பரிசு தமக்கு எல்லாம் அருளும் வைத்தார்;
 அடுசுடலைப் பொடிவைத்தார்; அழகும் வைத்தார்;
ஓம்பரிய வல்வினை நோய் தீர வைத்தார்;
 உமையை ஒரு பால் வைத்தார்; உகந்து வானோர்,
நாம்,பரவும் திருவடி என் தலைமேல் வைத்தார்-
 நல்லூர் எம் பெருமானார் நல்லவாறே! 10
 
குலம் கிளரும் வருதிரைகள் ஏழும் வைத்தார்;
 குருமணிசேர் மலை வைத்தார்; மலையைக் கையால்
உலம் கிளர எடுத்தவன் தோள் முடியும் நோவ
 ஒரு விரலால் உற வைத்தார் "இறைவா!" என்று
புலம்புதலும், அருளொடு போர் வாளும் வைத்தார்;
 புகழ் வைத்தார்; புரிந்து ஆளாக் கொள்ள வைத்தார்;
நலம் கிளரும் திருவடி என் தலை மேல் வைத்தார்-
 நல்லூர் எம் பெருமானார் நல்லவாறே! 11 




 

Wednesday, June 10, 2026

நாராயணீயம் தசகம் 29. ஏகோனத்ரிம்சதசகம் – மோஹின்யவதாரம் ஆதி

நாராயணீயம் 29. ஏகோனத்ரிம்ஶதஶகம் – மோஹின்யவதாரம் ஆதி


உத்³க³ச்ச²தஸ்தவ கராத³ம்ருதம் ஹரத்ஸு

தை³த்யேஷு தானஶரணானனுனீய தே³வான் ।

ஸத்³யஸ்திரோத³தி⁴த² தே³வ ப⁴வத்ப்ரபா⁴வா-

-து³த்³யத்ஸ்வயூத்²யகலஹா தி³திஜா ப³பூ⁴வு꞉ ॥ 29-1 ॥


ஶ்யாமாம் ருசா(அ)பி வயஸா(அ)பி தனும் ததா³னீம்

ப்ராப்தோ(அ)ஸி துங்க³குசமண்ட³லப⁴ங்கு³ராம் த்வம் ।

பீயூஷகும்ப⁴கலஹம் பரிமுச்ய ஸர்வே

த்ருஷ்ணாகுலா꞉ ப்ரதியயுஸ்த்வது³ரோஜகும்பே⁴ ॥ 29-2 ॥


கா த்வம் ம்ருகா³க்ஷி விப⁴ஜஸ்வ ஸுதா⁴மிமாமி-

-த்யாரூட⁴ராக³விவஶானபி⁴யாசதோ(அ)மூன் ।

விஶ்வஸ்யதே மயி கத²ம் குலடாஸ்மி தை³த்யா

இத்யாளபன்னபி ஸுவிஶ்வஸிதானதானீ꞉ ॥ 29-3 ॥


மோதா³த்ஸுதா⁴கலஶமேஷு த³த³த்ஸு ஸா த்வம்

து³ஶ்சேஷ்டிதம் மம ஸஹத்⁴வமிதி ப்³ருவாணா ।

பங்க்திப்ரபே⁴த³விநிவேஶிததே³வதை³த்யா

லீலாவிளாஸக³திபி⁴꞉ ஸமதா³꞉ ஸுதா⁴ம் தாம் ॥ 29-4 ॥


அஸ்மாஸ்வியம் ப்ரணயினீத்யஸுரேஷு தேஷு

ஜோஷம் ஸ்தி²தேஷ்வத² ஸமாப்ய ஸுதா⁴ம் ஸுரேஷு ।

த்வம் ப⁴க்தலோகவஶகோ³ நிஜரூபமேத்ய

ஸ்வர்பா⁴னுமர்த⁴பரிபீதஸுத⁴ம் வ்யலாவீ꞉ ॥ 29-5 ॥


த்வத்த꞉ ஸுதா⁴ஹரணயோக்³யப²லம் பரேஷு

த³த்த்வா க³தே த்வயி ஸுரை꞉ க²லு தே வ்யக்³ருஹ்ணன் ।

கோ⁴ரே(அ)த² மூர்ச²தி ரணே ப³லிதை³த்யமாயா-

-வ்யாமோஹிதே ஸுரக³ணே த்வமிஹாவிராஸீ꞉ ॥ 29-6 ॥


த்வம் காலனேமிமத² மாலிமுகா²ன் ஜக⁴ந்த²

ஶக்ரோ ஜகா⁴ன ப³லிஜம்ப⁴வலான் ஸபாகான் ।

ஶுஷ்கார்த்³ரது³ஷ்கரவதே⁴ நமுசௌ ச லூனே

பே²னேன நாரத³கி³ரா ந்யருணோ ரணம் த்வம் ॥ 29-7 ॥


யோஷாவபுர்த³னுஜமோஹனமாஹிதம் தே

ஶ்ருத்வா விளோகனகுதூஹலவான் மஹேஶ꞉ ।

பூ⁴தை꞉ ஸமம் கி³ரிஜயா ச க³த꞉ பத³ம் தே

ஸ்துத்வா(அ)ப்³ரவீத³பி⁴மதம் த்வமதோ² திரோதா⁴꞉ ॥ 29-8 ॥


ஆராமஸீமனி ச கந்து³ககா⁴தலீலா-

-லோலாயமானநயனாம் கமனீம் மனோஜ்ஞாம் ।

த்வாமேஷ வீக்ஷ்ய விக³ளத்³வஸனாம் மனோபூ⁴-

-வேகா³த³னங்க³ரிபுரங்க³ ஸமாலிலிங்க³ ॥ 29-9 ॥


பூ⁴யோ(அ)பி வித்³ருதவதீமுபதா⁴வ்ய தே³வோ

வீர்யப்ரமோக்ஷவிகஸத்பரமார்த²போ³த⁴꞉ ।

த்வன்மானிதஸ்தவ மஹத்த்வமுவாச தே³வ்யை

தத்தாத்³ருஶஸ்த்வமவ வாதநிகேதநாத² ॥ 29-10 ॥



Tuesday, June 9, 2026

நாலாயிர திவ்வியப் பிரபந்தம் - 9. என்னாதன் - நந்தன் மதலையைக் காகுத்தனை நவின்று (பாசுரம் 307-317)

நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
9. என்னாதன் - நந்தன் மதலையைக் காகுத்தனை நவின்று
உந்தி பறத்தல் - கலித்தாழிசை

என்னாதன் தேவிக்கன் றின்பப்பூ ஈயாதாள்
தன், நாதன் காணவே தண்பூ மரத்தினை,
வன்னாதப் புள்ளால் வலியப் பறித்திட்ட,
என்னாதன் வன்மையைப் பாடிப்பற
எம்பிரான் வன்மையைப் பாடிப்பற. 307

என்வில் வலிகண்டு போவென் றெதிர்வந்தான்
தன், வில்லி னோடும் தவத்தை யெதிர்வாங்கி,
முன்வில் வலித்து முதுபெண் ணுயிருண்டான்
தன், வில்லின் வன்மையைப் பாடிப்பற
தாசரதி தன்மையைப் பாடிப்பற. 308

உருப்பிணி நங்கையைத் தேரேற்றிக் கொண்டு,
விருப்புற்றங் கேக விரைந்தெதிர் வந்து1,
செருக்குற்றான் வீரஞ் சிதைய, தலையைச்
சிரைத்திட்டான் வன்மையைப் பாடிப்பற
தேவகி சிங்கத்தைப் பாடிப்பற. 309

மாற்றுத்தாய் சென்று வனம்போகே யென்றிட,
ஈற்றுத்தாய் பின்தொடர்ந்தெம்பிரான் என்றழ,
கூற்றுத்தாய் சொல்லக் கொடிய வனம்போன,
சீற்ற மிலாதானைப் பாடிப்பற
சீதை மணாளனைப் பாடிப்பற. 310

பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கைசெய்து,
நஞ்சுமிழ் நாகம் கிடந்தநற் பொய்கைபுக்கு,
அஞ்சப் பணத்தின்மேல் பாய்ந்திட் டருள்செய்த,
அஞ்சன வண்ணனைப் பாடிப்பற
அசோதைதன் சிங்கத்தைப் பாடிப்பற. 311

முடியொன்றி மூவுல கங்களு மாண்டு,உன்
அடியேற் கருளென் றவன்பின் தொடர்ந்த,
படியில் குணத்துப் பரதநம் பிக்கு, அன்
றடிநிலை யீந்தானைப் பாடிப்பற
அயோத்தியர் கோமானைப் பாடிப்பற. 312

காளியன் பொய்கை கலங்கப்பாய்ந் திட்டு, அவன்
நீள்முடி யைந்திலும் நின்று நடஞ்செய்து,
மீள அவனுக் கருள்செய்த வித்தகன்,
தோள்வலி வீரமே பாடிப்பற
தூமணி வண்ணனைப் பாடிப்பற. 313

தாற்கிளந் தம்பிக் கரசீந்து, தண்டகம்
நூற்றவன் சொற்கொண்டு போகி, நுடங்கிடைச்
சூர்ப்ப ணகாவைச் செவியொடு மூக்கு, அவள்
ஆர்க்க அரிந்தானைப் பாடிப்பற
அயோத்திக் கரசனைப் பாடிப்பற. 314

மாயச் சகட முதைத்து மருதிறுத்து,
ஆயர்க ளோடுபோய் ஆநிரை காத்து, அணி
வேயின் குழலூதி வித்தக னாய்நின்ற,
ஆயர்க ளேற்றினைப் பாடிப்பற
ஆனிரை மேய்த்தானைப் பாடிப்பற. 315

காரார் கடலை யடைத்திட் டிலங்கைபுக்கு,
ஓராதான் பொன்முடி ஒன்பதோ டொன்றையும்,
நேரா அவன் தம்பிக் கேநீ ளரசீந்த,
ஆரா வமுதனைப் பாடிப்பற
அயோத்தியர் வேந்தனைப் பாடிப்பற. 316

நந்தன் மதலையைக் காகுத்த னைநவின்று,
உந்தி பறந்த வொளியிழை யார்கள்சொல்,
செந்தமிழ்த் தென்புது வைவிட்டு சித்தன்சொல்,
ஐந்தினோ டைந்தும்வல் லார்க்கல்ல லில்லையே. 317



Monday, June 8, 2026

முருகன் போற்றிகள் 651 to 676

முருகன் போற்றிகள் 651 to 676


651. ஓம் தேவர்கள் தம்பிரானே போற்றி

652. ஓம் தேனாற்றுக் குரிசிலே போற்றி

653. ஓம் தேசிகனே போற்றி

654. ஓம் தேவர்கள் சிறை மீட்டு காத்தவனே போற்றி

655. ஓம் தேவர்களின் அரசே போற்றி

656. ஓம் தேன் போன்றவனே போற்றி

657. ஓம் தேனும் தினைமாவும் ஏற்பாய் போற்றி

658. ஓம் தேவனே போற்றி

659. ஓம் தேவர்களின் துயர் துடைத்த பெருமாளே போற்றி

660. ஓம் தேவகுஞ்சரி பாகா போற்றி

661. ஓம் தேவாதி தேவன் புதல்வா போற்றி

662. ஓம் தேவர்படைத் தலைவனே போற்றி

663. ஓம் தேடுவோருக்கு எளியவனே போற்றி

664. ஓம் தேனான தமிழிசையில் திளைப்போனே போற்றி

665. ஓம் தேவனூர்த் தெய்வமே போற்றி

666. ஓம் தைப்பூசத்தில் மகிழ்வாய் போற்றி

667. ஓம் தொடியணி தோளா போற்றி

668. ஓம் தொல் புகழ் உடையவனே போற்றி

669. ஓம் தோகை மயில் வாகனனே போற்றி

670. ஓம் நம்பி மருகனே போற்றி

671. ஓம் நற்றவ வேடம் அணிந்தாய் போற்றி

672. ஓம் நவவீரர் நாயகனே போற்றி

673. ஓம் நக்கீரர்க்கு உதவிய நல் தெய்வமே போற்றி

674. ஓம் நக்கீரர் பாட்டில் மயங்கிய தேவனே போற்றி

675. ஓம் நஞ்சுண்டவரின் புதல்வா போற்றி

676. ஓம் நவநீதன் மருகா போற்றி




Sunday, June 7, 2026

ஸ்ரீ ஆதித்ய ஸ்தவம் – சூரிய நாராயணனைப் போற்றும் தெய்வீக ஸ்தோத்திரம்

 

ஸ்ரீ ஆதித்ய ஸ்தவம் – சூரிய நாராயணனைப் போற்றும் தெய்வீக ஸ்தோத்திரம்

ஸ்ரீ ஆதித்ய ஸ்தவம் என்றால் என்ன?

ஸ்ரீ ஆதித்ய ஸ்தவம் என்பது சூரிய நாராயண பகவானின் மகிமையைப் போற்றும் அரிய ஸ்தோத்திரமாகும். இதில் பிரம்மதேவர் சூரியனை வெறும் கிரகமாக அல்லாமல், பரம்பொருளாகவும், பிரபஞ்சத்தின் ஆதார சக்தியாகவும், வேதங்களின் சாரமாகவும் போற்றுகிறார்.

இந்த ஸ்தோத்திரம் சூரிய பகவானின் வெளிப்புற ஒளியை மட்டும் அல்லாமல், மனிதனின் உள்ளார்ந்த ஞான ஒளியையும் எடுத்துரைக்கிறது. சூரியனை பரமாத்மாவின் வெளிப்பாடாகக் காணும் வேதாந்த தத்துவம் இந்த ஸ்தவத்தின் ஒவ்வொரு ஸ்லோகத்திலும் ஒளிந்துள்ளது.


ஸ்ரீ ஆதித்ய ஸ்தவத்தின் பின்னணி

படைப்புத் தொழிலை மேற்கொள்ள வேண்டிய பிரம்மதேவர், சூரிய நாராயணனின் பேரொளியை கண்டு அவரைத் துதிக்கிறார். அந்த பேரொளி காரணமாக உலகப் படைப்பை மேற்கொள்ள முடியாமல் இருந்த பிரம்மா, சூரிய பகவானை வணங்கி அவரது அருளை வேண்டுகிறார்.

அப்போது அவர் பாடிய துதியே "ஸ்ரீ ஆதித்ய ஸ்தவம்" எனப் போற்றப்படுகிறது.


ஸ்தோத்திரத்தின் மையக் கருத்து

இந்த ஸ்தோத்திரத்தில் சூரிய பகவான்:

  • பரம்பொருளாக

  • பரமஜோதி வடிவாக

  • வேதங்களின் மூலமாக

  • பஞ்சபூதங்களின் ஆதாரமாக

  • படைப்பு, காப்பு, அழிவு ஆகியவற்றின் காரணமாக

  • யோகிகள் தியானிக்கும் பரமாத்மாவாக

புகழப்படுகிறார்.


ஸ்லோகங்களின் தத்துவ விளக்கம்

ஸ்லோகம் 1

நமஸ்யே யந்மயம் ஸர்வமேதத்ஸர்வமயஶ்ச ய꞉ ।
விஶ்வமூர்தி꞉ பரம்ஜ்யோதிர்யத்தத்³த்⁴யாயந்தி யோகி³ந꞉ ॥

தமிழ் பொருள்

இந்த உலகம் முழுவதும் யாரால் நிரம்பியிருக்கிறதோ, யார் எல்லாவற்றிலும் உறைந்து இருக்கிறாரோ, யார் பரம ஒளியாகவும், பிரபஞ்ச வடிவமாகவும் திகழ்கிறாரோ, யாரை யோகிகள் தியானிக்கிறார்களோ அந்த ஆதித்ய பகவானை நான் வணங்குகிறேன்.

விளக்கம்

சூரிய பகவான் வெறும் ஒளியை வழங்கும் தெய்வம் மட்டுமல்ல. அவர் பரம்பொருளின் ஒளி வடிவம். உலகில் காணப்படும் அனைத்திலும் இறைவனின் சக்தி நிறைந்திருக்கிறது என்பதை இந்த ஸ்லோகம் எடுத்துரைக்கிறது.


ஸ்லோகம் 2

ய ருங்மயோ யோ யஜுஷாம் நிதா⁴நம்
ஸாம்நாம் ச யோ யோநிரசிந்த்யஶக்தி꞉ ।
த்ரயீமய꞉ ஸ்தூ²லதயார்த⁴மாத்ரா
பரஸ்வரூபோ கு³ணபாரயோக்³ய꞉ ॥

தமிழ் பொருள்

ரிக், யஜுர், சாம வேதங்களின் சாரமாகவும், அவற்றின் ஆதாரமாகவும், எண்ணிப் புரிந்து கொள்ள முடியாத சக்தியுடையவராகவும், மூன்று வேதங்களின் வடிவாகவும், அவற்றைக் கடந்த பரம்பொருளாகவும் இருப்பவர் நீர். மூன்று குணங்களையும் தாண்டி நிற்கும் உயர்ந்த தெய்வீக வடிவம் நீர்.

விளக்கம்

வேதங்கள் அனைத்தும் இறுதியில் பரம்பொருளையே சுட்டிக்காட்டுகின்றன. அந்த வேதங்களின் உயிரும், சாரமும் சூரிய நாராயணனே என்பதை இந்த ஸ்லோகம் கூறுகிறது.


ஸ்லோகம் 3

த்வாம் ஸர்வஹேதும் பரமம் ச வேத்³ய-
மாத்³யம் பரம் ஜ்யோதிரவேத்³யரூபம் ।
ஸ்தூ²லம் ச தே³வாத்மதயா நமஸ்யே
பா⁴ஸ்வந் தமாத்³யம் பரமம் பரேப்⁴ய꞉ ॥

தமிழ் பொருள்

எல்லாவற்றிற்கும் காரணமானவரும், அறிய வேண்டிய உயர்ந்த உண்மையுமானவரும், ஆதியானவரும், பரம ஒளியானவரும், அறிவால் முழுமையாக அறிய முடியாதவருமான உம்மை நான் வணங்குகிறேன். எல்லா தேவர்களுக்கும் மேலான உயர்ந்த தெய்வீக ஒளியே! உமக்கு என் பணிவான நமஸ்காரம்.

விளக்கம்

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்திற்கும் மூல காரணம் பரம்பொருளே. அந்த பரம்பொருள் சூரிய நாராயணனின் ஒளியில் வெளிப்படுகிறது என்று பிரம்மதேவர் போற்றுகிறார்.


ஸ்லோகம் 4

ஸ்ருஷ்டிம் கரோமி யத³ஹம் தவஶக்திராத்³யா
தத்ப்ரேரிதோ ஜலமஹீபவநாக்³நிரூபாம் ।
தத்³தே³வதாதி³விஷயாம் ப்ரணவாத்³யஶேஷாம்
நாத்மேச்ச²யா ஸ்தி²திலயாவபி தத்³வதே³வ ॥

தமிழ் பொருள்

நான் படைப்புத் தொழிலைச் செய்கிறேன் என்றாலும், அது உமது ஆதிசக்தியால் மட்டுமே நடக்கிறது. நீரே என்னைத் தூண்டி நீர், நிலம், காற்று, நெருப்பு முதலியவற்றையும், அவற்றின் அதிதேவதைகளையும் உருவாக்கச் செய்கிறீர். பாதுகாப்பும், அழிவும் கூட என் விருப்பத்தால் அல்ல; உமது சித்தத்தின்படியே நடைபெறுகின்றன.

விளக்கம்

படைப்புக் கடவுளான பிரம்மாவே தன்னுடைய சக்தி தனக்குச் சொந்தமானது அல்ல என்று ஒப்புக்கொள்கிறார். அனைத்தும் இறைவனின் அருளால் நடைபெறுகின்றன என்பதே இதன் சாரம்.


ஸ்லோகம் 5

வஹ்நிஸ்த்வமேவ ஜலஶோஷணத꞉ ப்ருதி²வ்யா꞉
ஸ்ருஷ்டிம் கரோஷி ஜக³தாம் ச ததா²த்³ய பாகம் ।
வ்யாபீ த்வமேவ ப⁴க³வந் க³க³நஸ்வரூபம்
த்வம் பஞ்சதா⁴ ஜக³தி³த³ம் பரிபாஸி விஶ்வம் ॥

தமிழ் பொருள்

நீரே அக்னியாக இருந்து நீரை உலர்த்துகின்றீர். உலகின் படைப்பையும் நடத்துகின்றீர். ஆகாய வடிவில் எங்கும் நிறைந்திருக்கும் நீர், பஞ்சபூதங்களாக வெளிப்பட்டு இந்த பிரபஞ்சத்தையே காத்து நடத்துகின்றீர்.

விளக்கம்

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களின் பின்னணியில் செயல்படும் ஒரே தெய்வீக சக்தி சூரிய நாராயணனே.


ஸ்லோகம் 6

யஜ்ஞைர்யஜந்தி பரமாத்மவிதோ³ ப⁴வந்தம்
விஷ்ணுஸ்வரூபமகி²லேஷ்டிமயம் விவஸ்வந் ।
த்⁴யாயந்தி சாபி யதயோ நியதாத்மசித்தா꞉
ஸர்வேஶ்வரம் பரமமாத்மவிமுக்திகாமா ॥

தமிழ் பொருள்

பரமாத்மாவை உணர்ந்த ஞானிகள் உம்மை விஷ்ணு வடிவமாகக் கருதி யாகங்களால் வழிபடுகின்றனர். மனமும் புலன்களும் அடங்கிய யோகிகள், முக்தியை நாடி உம்மை எல்லோருக்கும் தலைவரான பரமேஸ்வரராக தியானிக்கின்றனர்.

விளக்கம்

வழிபாடு, யாகம், தியானம் போன்ற பல்வேறு மார்க்கங்கள் இருந்தாலும், அவை அனைத்தும் ஒரே பரம்பொருளையே அடையச் செய்கின்றன.


ஸ்லோகம் 7

நமஸ்தே தே³வரூபாய யஜ்ஞரூபாய தே நம꞉ ।
பரப்³ரஹ்மஸ்வரூபாய சிந்த்யமாநாய யோகி³பி⁴꞉ ॥

தமிழ் பொருள்

தேவர்களின் வடிவமாகவும், யாகங்களின் வடிவமாகவும், பரபிரம்மமாகவும், யோகிகளால் தியானிக்கப்படும் பரமாத்ம வடிவமாகவும் இருக்கும் உமக்கு என் வணக்கங்கள்.

விளக்கம்

அனைத்து தெய்வங்களிலும், அனைத்து வேத சடங்குகளிலும் விளங்கும் ஒரே பரம்பொருள் சூரிய நாராயணனே என்பதை இந்த ஸ்லோகம் வலியுறுத்துகிறது.


ஸ்லோகம் 8

உபஸம்ஹர தேஜோ யத்தேஜஸ꞉ ஸம்ஹதிஸ்தவ ।
ஸ்ருஷ்டேர்விதா⁴தாய விபோ⁴ ஸ்ருஷ்டௌ சாஹம் ஸமுத்³யத꞉ ॥

தமிழ் பொருள்

ஓ பரம்பொருளே! உமது ஒளியின் தீவிரத்தை சிறிது குறைக்க வேண்டும். நான் படைப்புத் தொழிலை மேற்கொள்ளத் தயாராக இருக்கிறேன்; ஆகையால் உமது பேரொளியைச் சற்றே அடக்கி அருள வேண்டும்.

விளக்கம்

இறைவனின் மகிமையும் ஒளியும் எல்லையற்றது. அந்த பேரொளியை உயிர்கள் தாங்கிக் கொள்ளும் அளவுக்கு இறைவன் தன்னைத் தாழ்த்திக் கொள்கிறார் என்பதைக் குறிக்கிறது.


ஸ்லோகம் 9

இத்யேவம் ஸம்ஸ்துதோ பா⁴ஸ்வாந் ப்³ரஹ்மணா ஸர்க³கர்த்ருணா ।
உபஸம்ஹ்ருதவாம்ஸ்தேஜ꞉ பரம் ஸ்வல்பமதா⁴ரயத் ॥

தமிழ் பொருள்

இவ்வாறு பிரம்மனால் துதிக்கப்பட்ட சூரிய பகவான், தமது பேரொளியைச் சுருக்கி, குறைந்த அளவிலான ஒளியுடன் திகழ்ந்தார்.

விளக்கம்

பக்தனின் உண்மையான வேண்டுதலுக்கு இறைவன் கருணையுடன் பதிலளிப்பார் என்பதை இந்த ஸ்லோகம் உணர்த்துகிறது.


ஸ்லோகம் 10

சகார ச தத꞉ ஸ்ருஷ்டிம் ஜக³த꞉ பத்³மஸம்ப⁴வ꞉ ।
ததா² தேஷு மஹாபா⁴க³꞉ பூர்வகல்பாந்தரேஷு வை ॥

தமிழ் பொருள்

அதன் பின்னர் தாமரையிலிருந்து தோன்றிய பிரம்மதேவர் உலகப் படைப்பைத் தொடங்கினார். முந்தைய கல்பங்களில் நடந்தது போலவே படைப்பு நிகழ்ந்தது.

விளக்கம்

படைப்புச் சக்கரம் தொடர்ந்து நடைபெறுகிறது. ஒவ்வொரு கல்பத்திலும் இறைவனின் சித்தப்படி உலகம் தோன்றி இயங்குகிறது.


ஸ்லோகம் 11

தே³வாஸுராதீ³ந்மர்த்யாம்ஶ்ச பஶ்வாதீ³ந்வ்ருக்ஷவீருத⁴꞉ ।
ஸஸர்ஜ பூர்வவத்³ப்³ரஹ்மா நரகாம்ஶ்ச மஹாமுநே ॥

தமிழ் பொருள்

ஓ மஹாமுனிவரே! பிரம்மா முந்தையபடி தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள், மிருகங்கள், மரங்கள், செடிகள் மற்றும் பல்வேறு நரகங்களையும் படைத்தார்.

விளக்கம்

உயிரினங்கள், இயற்கை, உலகங்கள் அனைத்தும் பரம்பொருளின் திட்டத்தின்படி தோன்றி இயங்குகின்றன என்பதை இந்த ஸ்லோகம் விளக்குகிறது.


ஸ்ரீ ஆதித்ய ஸ்தவம் பாராயணம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்

இந்த ஸ்தோத்திரத்தை பக்தியுடன் பாராயணம் செய்வதால்:

  • மனதில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்

  • ஞானமும் தெளிவும் வளரும்

  • சோம்பல் மற்றும் மன இருள் நீங்கும்

  • சூரிய கிரகத்தின் அனுகிரகம் கிடைக்கும்

  • தன்னம்பிக்கை அதிகரிக்கும்

  • உடல் ஆரோக்கியம் மேம்படும்

  • ஆன்மீக முன்னேற்றம் ஏற்படும்

  • பரம்பொருள் பற்றிய புரிதல் வளர்ச்சி பெறும்

  • தியான சக்தி அதிகரிக்கும்

  • முக்தி மார்க்கத்தில் முன்னேற்றம் கிடைக்கும்


எப்போது பாராயணம் செய்ய வேண்டும்?

பின்வரும் நேரங்களில் ஸ்ரீ ஆதித்ய ஸ்தவத்தை பாராயணம் செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது:

  • தினமும் சூரியோதய நேரத்தில்

  • ஞாயிற்றுக்கிழமைகளில்

  • ரத சப்தமி நாளில்

  • உத்திராயண புண்ணிய காலத்தில்

  • சூரிய நமஸ்காரத்திற்குப் பிறகு

  • ஆரோக்கியம் மற்றும் மன உறுதி வேண்டும்போது


ஆன்மீகச் செய்தி

இந்த ஸ்தோத்திரம் சூரியனை ஒரு விண்கோளாக மட்டும் பார்க்கவில்லை. மாறாக, சூரியனின் வழியாக வெளிப்படும் பரம்பொருளின் ஒளியை உணரச் செய்கிறது.

உலகிற்கு வெளிச்சம் தரும் சூரியனைப் போல, நம் உள்ளத்தில் இருக்கும் அறியாமை இருளை அகற்றி ஞான ஒளியை வழங்கும் பரமாத்மாவை நினைவூட்டுவதே இந்த ஸ்தோத்திரத்தின் முக்கிய நோக்கமாகும்.


முடிவுரை

ஸ்ரீ ஆதித்ய ஸ்தவம் என்பது சூரிய பகவானின் மகிமையைப் போற்றும் ஒரு சாதாரண துதி அல்ல. இது வேதாந்த தத்துவம், பரம்பொருள் உண்மை, பிரபஞ்சப் படைப்பின் ரகசியம் மற்றும் ஆன்மீக முன்னேற்றத்தின் பாதையை எடுத்துரைக்கும் அரிய ஸ்தோத்திரமாகும்.

தினமும் பக்தியுடன் இந்த ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்து சூரிய நாராயணனின் அருளைப் பெறுவோம். அவரது தெய்வீக ஒளி நம் வாழ்க்கையில் ஞானம், ஆரோக்கியம், வெற்றி மற்றும் ஆன்மீக முன்னேற்றத்தை அருளட்டும்.

ஓம் ஸூர்ய நாராயணாய நமஃ



Saturday, June 15, 2024

பாபஹர தசமி - ஸ்ரீ கங்கா ஸ்துதி

  ஸ்ரீ கங்கா ஸ்துதி - ஸ்கந்த புராணம்


ஈஸ்²வர உவாச -

ஓம்ʼ நம​:ஸி²வாயை க³ங்கா³யை ஸி²வதா³யை நமோ நம​: |

நமஸ்தே விஷ்ணுரூபிண்யை ப்³ரஹ்மமூர்த்யை நமோ நம​: || 1||


நமஸ்தே ருத்³ரரூபிண்யை ஸா²ங்கர்யை தே நமோ நம​: |

ஸர்வதே³வ ஸ்வரூபிண்யை நமோ பே⁴ஷஜ மூர்த்தயே || 2||


ஸர்வஸ்ய ஸர்வ வ்யாதீ⁴னாம்ʼ பி⁴ஷக் ஸ்²ரேஷ்ட்²யை நமோ(அ)ஸ்து தே |

ஸ்தா²ஸ்னு ஜங்க³ம ஸம்பூ⁴த விஷஹந்த்ர்யை நமோ(அ)ஸ்து தே || 3||


ஸம்ʼஸார விஷ நாஸி²ன்யை ஜீவனாயை நமோ(அ)ஸ்து தே |

தாப த்ரிதய ஸம்ʼஹந்த்ர்யை ப்ராணேஸ்²யை தே நமோ நம​: || 4||


ஸா²ந்தி ஸந்தான காரிண்யை நமஸ்தே ஸு²த்³த⁴ மூர்த்தயே |

ஸர்வ ஸம்ʼஸு²த்³தி⁴ காரிண்யை நம​: பாபாரி மூர்த்தயே || 5||


பு⁴க்தி முக்தி ப்ரதா³யின்யை ப⁴த்³ரதா³யை நமோ நம​: |

நமஸ் த்ரைலோக்ய பூ⁴ஷாயை த்ரிபதா²யை நமோ நம​: || 6||


நமஸ் த்ரிஸு²க்ல ஸம்ʼஸ்தா²யை க்ஷமாவத்யை நமோ நம​: |

த்ரிஹுதாஸ²ன ஸம்ʼஸ்தா²யை தேஜோவத்யை நமோ நம​: || 7||


நந்தா³யை லிங்க³தா⁴ரிண்யை ஸுத⁴தா⁴ராத்மனே நம​: |

நமஸ்தே விஸ்²வ முக்²யாயை ரேவத்யை தே நமோ நம​: || 8||


ப்³ருʼஹத்யை தே நமஸ்தே(அ)ஸ்து லோகதா⁴த்ர்யை நமோ(அ)ஸ்து தே |

நமஸ்தே விஸ்²வ மித்ராயை நந்தி³ன்யை தே நமோ நம​: || 9||


ப்ருʼத்²வ்யை ஸி²வா (அ) ம்ருʼதாயை ச ஸுவ்ருʼஷாயை நமோ நம​: |

பராபர ஸ²தாட்⁴யாயை தாராயை தே நமோ நம​: || 10||


பாஸ²ஜால நிக்ருʼந்தின்யை அபி⁴ன்னாயை நமோ(அ)ஸ்து தே |

ஸா²ந்தாயை ச வரிஷ்டா²யை வரதா³யை நமோ நம​: || 11||


உக்³ராயை ஸுக²ஜக்³த்⁴தை ச ஸஞ்ஜீவின்யை நமோ(அ)ஸ்து தே |

ப்³ரஹ்மிஷ்டா²யை ப்³ரஹ்மாதா³யை து³ரிதக்⁴ன்யை நமோ நம​: || 12||


ப்ரணதார்த்தி ப்ரப⁴ஞ்ஜின்யை ஜக³ன்மாத்ரே நமோ(அ)ஸ்து தே |

ஸர்வாபத் ப்ரதிபக்ஷாயை மங்க³லாயை நமோ நம​: || 13||


ஸ²ரணாக³த தீ³னார்த்த பரித்ராண பராயணே |

ஸர்வஸ்யார்த்தி ஹரே தே³வீ நாராயணீ நமோ(அ)ஸ்து தே || 14||


நிர்லோபாயை து³ர்க³ஹந்த்ர்யை த³க்ஷாயை தே நமோ நம​: |

பராபர பராயை ச க³ங்கே³ நிர்வாண தா³யினீ || 15||


க³ங்கே³ மமா (அ) க்³ரதோ பூ⁴யா க³ங்கே³ மே திஷ்ட² ப்ருʼஷ்ட²த​: |

க³ங்கே³ மே பார்ஸ்²வயோரேதி⁴ க³ங்கே³ த்வய்யஸ்து மே ஸ்தி²தி​: || 16||


ஆதௌ³ த்வம்ʼ அந்தே மத்⁴யே ச ஸர்வம்ʼ த்வம்ʼ கா³ங்க³தே ஸி²வே |

த்வமேவ மூலம்ʼ ப்ரக்ருʼதிஸ் த்வம்ʼ புமான் பர ஏவ ஹி || 16||


க³ங்கே³ த்வம்ʼ பரமாத்மா ச ஸி²வஸ் துப்⁴யம்ʼ நம​: ஸி²வே || 17||


||  ப²லஸ்²ருதி​: ||

ய இத³ம்ʼ பட²தே ஸ்தோத்ரம்ʼ ஸ்²ருʼணுயாச் ச்²ரத்³ த⁴யா (அ) பி ய​: |

த³ஸ²தா⁴ முச்யதே பாபை​: காய வாக் சித்த ஸம்ப⁴வை​: || 18||


ரோக³ஸ்தோ² ரோக³தோ முச்யேத்³ விபத்³ப்⁴யஸ்² ச விபத்³யத​: |

முச்யதே ப³ந்த⁴னாத்³ ப³த்³தோ⁴ பீ⁴தோ பீ⁴தே​: ப்ரமுச்யதே || 19||


ஸர்வான் காமான் அவாப்னோதி ப்ரேத்ய ச த்ரிதி³வம்ʼ வ்ரஜேத் |

தி³வ்யம்ʼ விமானமாருஹ்ய தி³வ்யஸ்த்ரீ பரிஜீவித​: || 20||


க்³ருʼஹே(அ)பி லிகி²தம்ʼ யஸ்ய ஸதா³ திஷ்ட²தி தா⁴ரிதம் |

நா (அ) க்³னி சௌர ப⁴யம்ʼ தஸ்ய ந ஸர்பாதி³ ப⁴யம்ʼ க்வசித் || 21||


ஜ்யேஷ்டே² மாஸே ஸிதே பக்ஷே த³ஸ²மீ ஹஸ்த ஸம்ʼயுதா |

ஸம்ʼஹரேத் த்ரிவித⁴ம்ʼ பாபம்ʼ பு³த⁴ வாரேண ஸம்ʼயுதா || 22||


தஸ்யாம்ʼ த³ஸ²ம்யாம்ʼ ஏதச் ச ஸ்தோத்ரம்ʼ க³ங்கா³ ஜலே ஸ்தி²த​: |

ய​: படே²த்³ த³ஸ²க்ருʼத்வஸ்து த³ரித்³ரோ வாபி சா (அ) க்ஷம​: || 23||


ஸோ(அ)பி தத்ப²லம்ʼ ஆப்னோதி க³ங்கா³ம்ʼ ஸம்பூஜ்ய யத்னத​: |

பூர்வோக்தேன விதா⁴னேன யத்ப²லம்ʼ ஸம்ப்ரகீர்திதம் || 24||


யதா² கௌ³ரீ ததா² க³ங்கா³ தஸ்மாத³ கௌ³ர்யாஸ்து பூஜனே |

யோ விதி⁴ர் விஹித​: ஸம்யக் ஸோ(அ)பி க³ங்கா³ ப்ரபூஜனே || 25||


யதா²(அ)ஹம்ʼ த்வம்ʼ ததா² விஷ்ணோ யதா² த்வந்து ததா² ஹ்யுமா |

உமா யதா² ததா² க³ங்கா³ ச தரூபம்ʼ ந பி⁴த்³யதே || 26||


விஷ்ணு ருத்³ரா (அ) ந்தரம்ʼ சைவ யோ ப்³ரூதே மூட⁴ தீ⁴ஸ்து ஸ​: || 27||


கங்கா ஷ்டகம்


ப⁴க³வதி தவ தீரே நீரமாத்ராஶனோ(அ)ஹம்

விக³தவிஷயத்ருஷ்ண꞉ க்ருஷ்ணமாராத⁴யாமி |

ஸகல கலுஷப⁴ங்கே³ ஸ்வர்க³ஸோபானஸங்கே³

தரலதரதரங்கே³ தே³வி க³ங்கே³ ப்ரஸீத³ || 1 ||


ப⁴க³வதி ப⁴வலீலா மௌளிமாலே தவாம்ப⁴꞉

கணமணுபரிமாணம் ப்ராணினோ யே ஸ்ப்ருஶந்தி |

அமரனக³ரனாரீ சாமர க்³ராஹிணீனாம்

விக³த கலிகலங்காதங்கமங்கே லுட²ந்தி || 2 ||


ப்³ரஹ்மாண்ட³ம் க²ண்ட³யந்தீ ஹரஶிரஸி ஜடாவல்லிமுல்லாஸயந்தீ

ஸ்வர்லோகாதா³பதந்தீ கனககி³ரிகு³ஹாக³ண்ட³ஶைலாத் ஸ்க²லந்தீ |

க்ஷோணீப்ருஷ்டே² லுட²ந்தீ து³ரிதசயசமூர்னிர்ப⁴ரம் ப⁴ர்த்ஸயந்தீ

பாதோ²தி⁴ம் பூரயந்தீ ஸுரனக³ரஸரித்பாவனீ ந꞉ புனாது || 3 ||


மஜ்ஜன்மாதங்க³ கும்ப⁴ச்யுத மத³மதி³ராமோத³மத்தாலிஜாலம்

ஸ்னானை꞉ ஸித்³தா⁴ங்க³னானாம் குசயுக³ விலஸத்குங்குமாஸங்க³பிங்க³ம் |

ஸாயம் ப்ராதர்முனீனாம் குஶகுஸுமசயைஶ்சி²ன்னதீரஸ்த²னீரம்

பாயான்னோ கா³ங்க³மம்ப⁴꞉ கரிகலப⁴ கராக்ராந்த ரங்க³ஸ்தரங்க³ம் || 4 ||


ஆதா³வாதி³ பிதாமஹஸ்ய நியம வ்யாபார பாத்ரே ஜலம்

பஶ்சாத்பன்னக³ஶாயினோ ப⁴க³வத꞉ பாதோ³த³கம் பாவனம் |

பூ⁴ய꞉ ஶம்பு⁴ஜடாவிபூ⁴ஷண மணிர்ஜஹ்னோர்மஹர்ஷேரியம்

கன்யா கல்மஷனாஶினீ ப⁴க³வதீ பா⁴கீ³ரதீ² த்³ருஶ்யதே || 5 ||


ஶைலேந்த்³ராத³வதாரிணீ நிஜஜலே மஜ்ஜஜ்ஜனோத்தாரிணீ

பாராவாரவிஹாரிணீ ப⁴வப⁴யஶ்ரேணீ ஸமுத்ஸாரிணீ |

ஶேஷாங்கை³ரனுகாரிணீ ஹரஶிரோவல்லீத³ளாகாரிணீ

காஶீப்ராந்தவிஹாரிணீ விஜயதே க³ங்கா³ மனோஹாரிணீ || 6 ||


குதோ வீசிர்வீசிஸ்தவ யதி³ க³தா லோசனபத²ம்

த்வமாபீதா பீதாம்ப³ரபுரவாஸம் விதரஸி |

த்வது³த்ஸங்கே³ க³ங்கே³ பததி யதி³ காயஸ்தனுப்⁴ருதாம்

ததா³ மாத꞉ ஶாந்தக்ரதவபத³லாபோ⁴(அ)ப்யதிலகு⁴꞉ || 7 ||


க³ங்கே³ த்ரைலோக்யஸாரே ஸகலஸுரவதூ⁴தௌ⁴தவிஸ்தீர்ணதோயே

பூர்ணப்³ரஹ்மஸ்வரூபே ஹரிசரணரஜோஹாரிணி ஸ்வர்க³மார்கே³ |

ப்ராயஶ்சிதம் யதி³ ஸ்யாத்தவ ஜலகணிகா ப்³ரஹ்மஹத்யாதி³ பாபே

கஸ்த்வாம் ஸ்தோதும் ஸமர்த²꞉ த்ரிஜக³த³க⁴ஹரே தே³வி க³ங்கே³ ப்ரஸீத³ || 8 ||


மாதர்ஜாஹ்னவீ ஶம்பு⁴ஸங்க³மிலிதே மௌளௌ நிதா⁴யாஞ்ஜலிம்

த்வத்தீரே வபுஷோ(அ)வஸானஸமயே நாராயணாங்க்⁴ரித்³வயம் |

ஸானந்த³ம் ஸ்மரதோ ப⁴விஷ்யதி மம ப்ராணப்ரயாணோத்ஸவே

பூ⁴யாத்³ப⁴க்திரவிச்யுதா ஹரிஹராத்³வைதாத்மிகா ஶாஶ்வதீ || 9 ||


க³ங்கா³ஷ்டகமித³ம் புண்யம் ய꞉ படே²த்ப்ரயதோ நர꞉ |

ஸர்வபாபவினிர்முக்தோ விஷ்ணுலோகம் ஸ க³ச்ச²தி || 10 ||