Followers

Sunday, May 23, 2021

ஸ்ரீ நரசிம்மர் ஸ்லோகம்

 

நரசிம்ம ராஜ மந்திரம்

 

திருமணத்தடை, குழந்தை வரம், கடன் பிரச்னை, குடும்பத்தில் கருத்து வேறுபாடு, சொத்து பிரச்னை, தம்பதிகள் பிரிந்திருத்தல், தொழிலில் பின்னடைவு.இன்னும் வாழ்க்கையில் எத்தனையோ பிரச்னைகள் குறுக்கிடுகின்றன. இவை அத்தனையையும் உடைத்தெறியும் அழகான ஸ்தோத்திரமே ஸ்ரீ மந்திர ராஜபத ஸ்தோத்திரம். தினமும் மாலையில், லட்சுமி நரசிம்மர் படத்தின் முன் காய்ச்சிய பாலை படைத்துல இதை சொல்ல வேண்டும். ஸ்லோகம் படிக்க சிரமமாக இருந்தால், பொருளைப் படித்து பலன் பெறலாம்.

 

வ்ருத்தோத் புல்ல விசாலாக்ஷம்

விபக்ஷ க்ஷய தீக்ஷிதம்!

நிநாத த்ரஸ்த விச்வாண்டம்

விஷ்ணும் உக்ரம் நமாம்யஹம்!

 

பொருள்: பெரியதும், உருண்டையானதும், பக்தர்களைக் கண்டு மகிழ்வதுமான அகன்ற கண்களைக் கொண்டவரே! கம்பீர சிங்க கர்ஜனையால் அனைத்து உலகங்களையும் நடுங்கச் செய்பவரே! உக்கிர வடிவான நரசிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்.

 

ஸர்வை ரவத்யதாம் ப்ராப்தம்

ஸபலௌகம் திதே ஸூதம்!

நகாக்ரை சகலீசக்ரே

யஸ்தம் வீரம் நமாம்யஹம்!

 

பொருள்: திதியின் மகனும், கொடிய அரக்கனுமான இரண்யன், உலகத்தில் எவராலும் தன்னை கொல்ல இயலாது என ஆணவத்துடன் திரிந்தான். அவனைத் தன் நகத்தால் கிழித்து எறிந்த வீரம் மிக்கவரே! உம்மை நான் வணங்குகிறேன்.

 

பதா வஷ்டப்த பாதாளம்

மூர்த்தா விஷ்ட த்ரிவி டபம்!

புஜ ப்ரவிஷ்டாஷ்ட திசம்

மஹா விஷ்ணும் நமாம்யஹம்!

 

பொருள்: விஷ்ணு கீழுள்ள பாதாள உலகம் வரையுள்ள திருவடியையும், மேலுள்ள தேவலோகம் வரையுள்ள திருமுடியையும் கொண்டிருக்கிறார். அவரது கைகளும், தோள்களும் எட்டுத் திசைகளிலும் பரவியுள்ளன. விஸ்வ ரூபம் கொண்ட அந்த நரசிம்மரை நான் வணங்குகிறேன்.

 

ஜ்யோதீம் ஷ்யர்கேந்து நக்ஷத்ர

ஜ்வலநாதீந் யநுக்ரமாத்!

ஜ்வலந்தி தேஜஸா யஸ்ய

தம் ஜ்வலந்தம் நமாம்யஹம்!

 

பொருள்: சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், அக்னி ஆகிய அனைத்தும் விஷ்ணுவிடம் இருந்து வெளிவரும் பிரகாசத்தைக் கொண்டே ஒளி வீசுகின்றன. இப்படிப்பட்ட தேஜஸ்(ஒளி) மிக்க விஷ்ணுவின் அவதாரமான நரசிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்.

 

ஸர்வேந்த்ரியை ரபி விநா

ஸர்வம் ஸர்வத்ர ஸர்வதா!

யோ ஜாநாதி நமாம் யாத்யம்

தமஹம் ஸர்வதோ முகம்!

 

பொருள்: சக, இந்திரியங்கள், புலன்களின் உதவி இல்லாமல் எங்கும் நடக்கும் அனைத்து விஷயங்களையும் அறியும் பரம்பொருள் விஷ்ணு. எல்லாத் திசைகளிலும் பார்க்கும் சக்தி பெற்றிருப்பதால் ஸர்வதோமுகம் என போற்றப்படும் சக்தியுடைய நரசிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்.

 

நரவத் ஸிம்ஹவச் சைவ

யஸ்ய ரூபம் மஹாத்மந!

மஹா ஸடம் மஹா தம்ஷ்ட்ரம்

தம் ந்ருஸிம்ஹம் நமாம்யஹம்!

 

பொருள்: பக்தர்களுக்காக மனித வடிவமும், அசுரர்களை பயமுறுத்த சிங்க வடிவமுமாக வந்தவரே! பிடரி முடியும், கோரைப் பற்களும் ஒளி வீச அவதரித்த நரசிம்மரே! உம் அழகான வடிவத்தை நான் வணங்குகிறேன்.

 

யந்நாம ஸ்மரமணாத் பீதா

பூத வேதாள ராக்ஷஸா

ரோகாத் யாஸ்ச ப்ரணச் யந்தி

பீஷணம் தம் நமாம்யஹம்!

 

பொருள்: உன் திருநாமத்தை (பெயர்) சொல்லக் கூட தேவையில்லாமல், நரசிம்மா என்று மனதில் சிந்தித்த உடனேயே பூதம், வேதாளம், அசுரர் போன்றவர்களை நடுங்கச் செய்பவரே! தீராத நோயையும் தீர்ப்பவரே! எதிரிகளுக்கு பயம் உண்டாக்குபவரே! நரசிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்.

 

ஸர்வோபி யம் ஸமார்ச்ரித்ய

ஸகலம் பத்ர மச்நுதே!

ச்ரியா பத்ரயா ஜூஷ்ட

யஸ் தம் பத்ரம் நமாம்யஹம்!

 

பொருள்: அண்டினாலே எல்லா நன்மைகளும் அருள்பவரே! எல்லா நன்மையை அருள்வதால் பத்ரை என்று பெயர் பெற்ற லட்சுமி தாயாரால் விரும்பப்படுபவரே! சிறப்பு மிக்க லட்சுமி நரசிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்.

 

ஸாக்ஷாத் ஸ்வகாலே ஸம்ப்ராப்தம்

ம்ருத்யும் சத்ரு கணாந்விதம்!

பக்தாநாம் நாசயேத் யஸ்து

ம்ருத்யோர் ம்ருத்யும் நமாம்யஹம்!

 

பொருள்: மரண காலத்தில் எமதுõதர்கள் வந்தால், அவர்களுக்கு தன் பக்தர்களின் மீது உரிமை இல்லை என்பதை உணர்த்துபவரும், அவர்களை வலிய வந்து காப்பவரும், தன் பக்தர்களின் பகைவர்களை அழிப்பவரும், மரணத்திற்கே மரணத்தை உண்டாக்குபவருமான நரசிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்.

 

நமஸ்காரத்மகம் யஸ்மை

விதாய ஆத்ம நிவேதநம்!

த்யக்தது கோகிலாந் காமாந்

அச்நந்தம் தம் நமாம்யஹம்!

 

பொருள்: எந்தக் கடவுளை அடைக்கலம் புகுந்து நம் ஆத்மாவை அர்ப்பணித்தால் வாழ்வில் எல்லா மேன்மைகளும் பெறுவோமோ, யாரிடம் அடைக்கலம் புகுந்தால் துன்பம் எல்லாம் நீங்குமோ, அந்த நரசிம்மரை வணங்குகிறேன்.

 

தாஸபூதா: ஸ்வத ஸர்வே

ஹ்யாத்மாந பாமாத்மந!

அதோஹமபி தே தாஸ:

இதி மத்வா நமாம்யஹம்!

 

பொருள்: இந்த பூவுலகத்தில் மட்டும் இல்லாமல், அனைத்து உலகிலுள்ள உயிர்களும் உனக்கு அடிமையே ஆவர். அந்த முறையில் நானும் உனக்கு அடிமை ஆகிறேன். நரசிம்மரே! இந்த உண்மையை உணர்ந்து உம்மைச் சரணடைகிறேன்.

 

சமங்கரேண ஆதராத் ப்ரோக்தம்

பதாநாம் தத்வ நிர்ணயம்!

த்ரிஸந்த்யம் படேத் தஸ்ய

ஸ்ரீர்வித் யாயுஸ்ச வர்த்ததே!

 

பொருள்: ஜீவனாகிய நான், உள்ளத்தில் நரசிம்மனின் மீது கொண்ட அன்பினை சொற்களால் வெளிப்படுத்தினேன். இந்த ஸ்லோகங்களை காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளையிலும் பக்தியுடன் படிப்பவர்கள் அழகு, அறிவு, செல்வம், பக்தி ஆகியவை பெற்று வாழ்வர்.

 

உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்

ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்!

ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம்

ம்ருத்யோர் மருத்யும் நமாம்யஹம்!

 

பொருள்: கோபம், வீரம், தேஜஸ்(பிரகாசம்) கொண்டவர் மகாவிஷ்ணு. எல்லா திசைகளிலும் பார்வை செலுத்துபவர் என்பதால் ஸர்வதோமுகம் எனப்படுகிறார். எதிரிகளுக்கு பயத்தையும், மரணத்திற்கே மரணத்தையும், எல்லா நன்மைகளையும் தர வல்லவருமான அந்த நரசிம்மரை நான் வணங்குகிறேன்.

 

ஸ்ரீமதே லட்சுமி நரசிம்ஹ ப்ரஹ்மணே நமஹ

ஓம் ஸ்ரீம் ஸ்ரீயை நமஹ

ஓம் பூம் பூம்யை நமஹ

ஓம் நீம் நீளாயை நமஹ

 

பொருள்: ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் என்ற மகாதெய்வத்திற்கு நமஸ்காரம். லட்சுமி தாயாருக்கு நமஸ்காரம். பூமாதேவிக்கு நமஸ்காரம். நீளாதேவிக்கு நமஸ்காரம்.

 

நரசிம்ம மந்திரம்

எல்லா ஐஸ்வர்யங்களையும் அளிக்கும் நரசிம்மருக்குரிய ஸ்ரீ மந்திர ராஜபத ஸ்தோத்திரம்

 

யஸ்ப அபவத் பக்தஜன ஆர்த்திஹந்து

 

பித்ருத்வம் அந்யேஷு அவிசார்ய தூர்ணம்

ஸ்தம்பே அவதார தம் அநந்ய லப்யம்

லக்ஷ்மி ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே.

 

இந்த ஸ்லோகத்தை தினமும் 3 முறையாவது சொல்லி வாருங்கள். இந்த மந்திரத்தை சொல்ல முடியாதவர்கள் கீழே குறிப்பிட்டுள்ள இதன் பொருளையாவது படியுங்கள்

 

பக்தி அற்றவர்களால் அடைய முடியாதவனே

தாயின் கர்பத்தில் அவதரித்திருந்தால் பக்தர்களுக்கு உதவி செய்ய வர தாமதம் ஆகும் என்று தூணிலிருந்து அவதரித்தவனே

பக்தர்கள் நினைத்த உடன், வேண்டி அழைத்ததும் அவர்களின் துன்பத்தை போக்குபவனே

நரசிம்ம பெருமானே உனது திருவடியை சரணடைகிறேன்.

 

 

நரசிம்மர் மூல மந்திரம்

 

உக்ரம் வீரம் மஹா விஷ்ணும்

ஜ்வலந்தம் சர்வதோ முகம் நரசிம்மம்,

பீஷணாம் பத்ரம் ம்ருத்யம் ம்ருத்யம் நமாம் யஹம்

 

 

 

லட்சுமி நரசிம்மர் 108 போற்றி

 

1. ஓம் திருக்கடிகைத் தேவா போற்றி

2. ஓம் திருமாமகள் கேள்வா போற்றி

3. ஓம் யோக நரசிங்கா போற்றி

4. ஓம் ஆழியங்கையா போற்றி

5. ஓம் அக்காரக் கனியே போற்றி

6. ஓம் அனுமனுக்கு ஆழி அளித்தாய் போற்றி

7. ஓம் எக்காலத்தும் எந்தாய் போற்றி

8. ஓம் எழில் தோள் எம்மிராமா போற்றி

9. ஓம் சங்கரப்ரியனே போற்றி

10. ஓம் சார்ங்க விற்கையா போற்றி

11. ஓம் உலகமுண்ட வாயா போற்றி

12. ஓம் உவப்பில் கீர்த்தியம்மா போற்றி

13. ஓம் அடியவர்க்கருள்வாய் போற்றி

14. ஓம் அனைத்துலக முடையாய் போற்றி

15. ஓம் தாமரைக் கண்ணா போற்றி

16. ஓம் காமனைப் பயந்தாய் போற்றி

17. ஓம் ஊழி முதல்வா போற்றி

18. ஓம் ஒளி மணிவண்ணனே போற்றி

19. ஓம் ராவணாந்தகனே போற்றி

20. ஓம் இலங்கை எரித்த பிரான் போற்றி

21. ஓம் பெற்ற மாளியே போற்றி

22. ஓம் பேரில் மணாளா போற்றி

23. ஓம் செல்வ நாரணா போற்றி

24. ஓம் திருக்குறளா போற்றி

25. ஓம் இளங்குமார போற்றி

26. ஓம் விளக்கொளியே போற்றி

27. ஓம் சிந்தனைக்கினியாய் போற்றி

28. ஓம் வந்தெனை ஆண்டாய் போற்றி

29. ஓம் எங்கள் பெருமான் போற்றி

30. ஓம் இமையோர் தலைவா போற்றி

31. ஓம் சங்கு சக்கரத்தாய் போற்றி

32. ஓம் மங்கை மன்னன் மனத்தாய் போற்றி

33. ஓம் வேதியர் வாழ்வே போற்றி

34. ஓம் வேங்கடத்துறைவா போற்றி

35. ஓம் நந்தா விளக்கே போற்றி

36. ஓம் நால் தோளமுதே போற்றி

37. ஓம் ஆயர்தம் கொழுந்தே போற்றி

38. ஓம் ஆழ்வார்களுயிரே போற்றி

39. ஓம் நாமம் ஆயிரம் உடையாய் போற்றி

40. ஓம் வாமதேவனுக்கு அருளினாய் போற்றி

41. ஓம் மூவா முதல்வா போற்றி

42. ஓம் தேவாதி தேவா போற்றி

43. ஓம் எட்டெழுத்திறைவா போற்றி

44. ஓம் எழில்ஞானச் சுடரே போற்றி

45. ஓம் வரவரமுனி வாழ்வே போற்றி

46. ஓம் வட திருவரங்கா போற்றி

47. ஓம் ஏனம்முன் ஆனாய் போற்றி

48. ஓம் தானவன் ஆகம் கீண்டாய் போற்றி

49. ஓம் கஞ்சனைக் கடிந்தாய் போற்றி

50. ஓம் நஞ்சரவில் துயின்றாய் போற்றி

51. ஓம் மாலே போற்றி

52. ஓம் மாயப் பெருமானே போற்றி

53. ஓம் ஆலிலைத் துயின்றாய் போற்றி

54. ஓம் அருள்மாரி புகழே போற்றி

55. ஓம் விண் மீதிருப்பாய் போற்றி

56. ஓம் மண்மீது உழல்வோய் போற்றி

57. ஓம் மலைமேல் நிற்பாய் போற்றி

58. ஓம் மாகடல் சேர்ப்பாய் போற்றி

59. ஓம் முந்நீர் வண்ணா போற்றி

60. ஓம் முழுதும் கரந்துறைவாய் போற்றி

61. ஓம் கொற்றப் புள்ளுடையாய் போற்றி

62. ஓம் முற்ற இம் மண்ணளந்தாய் போற்றி

63. ஓம் அனைத்துலக முடையாய் போற்றி

64. ஓம் அரவிந்த லோசன போற்றி

65. ஓம் மந்திரப் பொருளே போற்றி

66. ஓம் இந்திரனுக்கருள்வாய் போற்றி

67. ஓம் குரு பரம்பரை முதலே போற்றி

68. ஓம் விகனைசர் தொழும் தேவா போற்றி

69. ஓம் பின்னை மணாளா போற்றி

70. ஓம் என்னையாளுடையாய் போற்றி

71. ஓம் நலம்தரும் சொல்லே போற்றி

72. ஓம் நாரண நம்பி போற்றி

73. ஓம் பிரகலாதப்ரியனே போற்றி

74. ஓம் பிறவிப் பிணியறுப்பாய் போற்றி

75. ஓம் பேயார் கண்ட திருவே போற்றி

76. ஓம் ஏழு மாமுனிவர்க்கு அருளே போற்றி

77. ஓம் ஏமகூட விமானத்து இறைவா போற்றி

78. ஓம் ஆனையின் நெஞ்சிடர் தீர்த்தாய் போற்றி

79. ஓம் கல்மாரி காத்தாய் போற்றி

80. ஓம் கச்சி யூரகத்தாய் போற்றி

81. ஓம் வில்லியறுத்த தேவா போற்றி

82. ஓம் வீடணனுக்கருளினாய் போற்றி

83. ஓம் இனியாய் போற்றி

84. ஓம் இனிய பெயரினாய் போற்றி

85. ஓம் புனலரங்கா போற்றி

86. ஓம் அனலுருவே போற்றி

87. ஓம் புண்ணியா போற்றி

88. ஓம் புராணா போற்றி

89. ஓம் கோவிந்தா போற்றி

90. ஓம் கோளரியே போற்றி

91. ஓம் சிந்தாமணி போற்றி

92. ஓம் சிரீதரா போற்றி

93. ஓம் மருந்தே போற்றி

94. ஓம் மாமணி வண்ணா போற்றி

95. ஓம் பொன் மலையாய் போற்றி

96. ஓம் பொன்வடிவே போற்றி

97. ஓம் பூந்துழாய் முடியாய் போற்றி

98. ஓம் பாண்டவர்க் கன்பா போற்றி

99. ஓம் குடந்தைக் கிடந்தாய் போற்றி

100. ஓம் தயரதன் வாழ்வே போற்றி

101. ஓம் மதிகோள் விடுத்தாய் போற்றி

102. ஓம் மறையாய் விரிந்த விளக்கே போற்றி

103. ஓம் வள்ளலே போற்றி

104. ஓம் வரமருள்வாய் போற்றி

105. ஓம் சுதாவல்லி நாதனே போற்றி

106. ஓம் சுந்தரத் தோளுடையாய் போற்றி

107. ஓம் பத்தராவியே போற்றி

108. ஓம் பக்தோசிதனே போற்றி

 

நரசிம்மர் 108 போற்றி

 

1.            ஓம் நரசிங்கப் பெருமானே போற்றி

2.            ஓம் நாடியருள் தெய்வமே போற்றி

3.            ஓம் அரசு அருள்வோனே போற்றி

4.            ஓம் அறக் காவலனே போற்றி

5.            ஓம் அசுவத்த நரசிம்மனே போற்றி

6.            ஓம் அக்ஷயதிருதியை நாதனே போற்றி

7.            ஓம் அழகிய சிம்மனே போற்றி

8.            ஓம் அம்ருத நரசிம்மனே போற்றி

9.            ஓம் அருள் அபயகரனே போற்றி

10.         ஓம் அகோபில நரசிம்மனே போற்றி

11.         ஓம் அரவப் புரியோனே போற்றி

12.         ஓம் அஞ்ஞான நாசகனே போற்றி

13.         ஓம் அகோர ரூபனே போற்றி

14.         ஓம் ஆகாச நரசிம்மனே போற்றி

15.         ஓம் அட்டகாச நரசிம்மனே போற்றி

16.         ஓம் ஆவேச நரசிம்மனே போற்றி

17.         ஓம் இரண்யாக்ஷ வதனே போற்றி

18.         ஓம் இரண்யகசிபு நிக்ரஹனே போற்றி

19.         ஓம் ஈரெண் கரனே போற்றி

20.         ஓம் இருந்தும் அருள்வோனே போற்றி

21.         ஓம் உக்ர நரசிம்மனே போற்றி

22.         ஓம் உடனே காப்பவனே போற்றி

23.         ஓம் ஏற்றுவோர்க் கெளியனே போற்றி

24.         ஓம் எழுபத்து நான்கு வடிவனே போற்றி

25.         ஓம் கதிர் நரசிம்மனே போற்றி

26.         ஓம் கதலி நரசிம்மனே போற்றி

27.         ஓம் கர்ஜிப்பவனே போற்றி

28.         ஓம் கம்பப் பெருமானே போற்றி

29.         ஓம் கல்யாண நரசிம்மனே போற்றி

30.         ஓம் கருடாத்ரி நாதனே போற்றி

31.         ஓம் கனககிரி நாதனே போற்றி

32.         ஓம் காராஞ்ச நரசிம்மனே போற்றி

33.         ஓம் கிரஹண நரசிம்மனே போற்றி

34.         ஓம் கிரிஜா நரசிம்மனே போற்றி

35.         ஓம் க்ரோத நரசிம்மனே போற்றி

36.         ஓம் குகாந்தர நரசிம்மனே போற்றி

37.         ஓம் கும்பி நரசிம்மனே போற்றி

38.         ஓம் கோல நரசிம்மனே போற்றி

39.         ஓம் கோஷ்டியூர் நரசிம்மனே போற்றி

40.         ஓம் கோர நரசிம்மனே போற்றி

41.         ஓம் சந்தனப் பிரியனே போற்றி

42.         ஓம் சர்வாபரணனே போற்றி

43.         ஓம் சக்ர நரசிம்மனே போற்றி

44.         ஓம் சத்ர நரசிம்மனே போற்றி

45.         ஓம் சண்ட நரசிம்மனே போற்றி

46.         ஓம் சம்ஹார நரசிம்மனே போற்றி

47.         ஓம் சத்ரவட நரசிம்மனே போற்றி

48.         ஓம் சரபத்தால் குளிர்ந்தவனே போற்றி

49.         ஓம் ஷட்கோணத் துறைபவனே போற்றி

50.         ஓம் சாந்த நரசிம்மனே போற்றி

51.         ஓம் சிம்மாசனனே போற்றி

52.         ஓம் சிம்மாசலனே போற்றி

53.         ஓம் சுடர் விழியனே போற்றி

54.         ஓம் சுந்தர சிம்மனே போற்றி

55.         ஓம் சுதர்சன நரசிம்மனே போற்றி

56.         ஓம் சுவதந்திர நரசிம்மனே போற்றி

57.         ஓம் செவ்வாடையனே போற்றி

58.         ஓம் செஞ்சந்தனப் பிரியனே போற்றி

59.         ஓம் சௌம்ய நரசிம்மனே போற்றி

60.         ஓம் ஸ்தௌண நரசிம்மனே போற்றி

61.         ஓம் ஜ்வலன நரசிம்மனே போற்றி

62.         ஓம் ஜ்வாலா நரசிம்மனே போற்றி

63.         ஓம் நவ நரசிம்மனே போற்றி

64.         ஓம் நவவ்யூக நரசிம்மனே போற்றி

65.         ஓம் நிருத்ய நரசிம்மனே போற்றி

66.         ஓம் நின்றும் அருள்வோனே போற்றி

67.         ஓம் பிரசன்ன நரசிம்மனே போற்றி

68.         ஓம் பிரசாத நரசிம்மனே போற்றி

69.         ஓம் பிரஹ்லாத நரசிம்மனே போற்றி

70.         ஓம் பிரஹ்லாத வரத நரசிம்மனே போற்றி

71.         ஓம் பக்த ரக்ஷகனே போற்றி

72.         ஓம் பகையழித்தவனே போற்றி

73.         ஓம் பஞ்ச முகனே போற்றி

74.         ஓம் பத்மாசனனே போற்றி

75.         ஓம் பஞ்ச நரசிம்மனே போற்றி

76.         ஓம் பரத்வாஜர்க்கருளியவனே போற்றி

77.         ஓம் பாவக நரசிம்மனே போற்றி

78.         ஓம் பானக நரசிம்மனே போற்றி

79.         ஓம் பார்க்கவ நரசிம்மனே போற்றி

80.         ஓம் பாடலாத்ரி நரசிம்மனே போற்றி

81.         ஓம் பிருத்வி நரசிம்மனே போற்றி

82.         ஓம் பிரம்மனுக்கருளியவனே போற்றி

83.         ஓம் புஷ்டி நரசிம்மனே போற்றி

84.         ஓம் புராண நாயகனே போற்றி

85.         ஓம் புச்ச நரசிம்மனே போற்றி

86.         ஓம் பூவராக நரசிம்மனே போற்றி

87.         ஓம் மால் அவதாரமே போற்றி

88.         ஓம் மாலோல நரசிம்மனே போற்றி

89.         ஓம் முக்கண்ணனே போற்றி

90.         ஓம் மலையன்ன தேகனே போற்றி

91.         ஓம் முக்கிய அவதாரனே போற்றி

92.         ஓம் முப்பத்திரு ÷க்ஷத்ரனே போற்றி

93.         ஓம் யோக நரசிம்மனே போற்றி

94.         ஓம் யோகானந்த நரசிம்மனே போற்றி

95.         ஓம் ருத்ர நரசிம்மனே போற்றி

96.         ஓம் ருண விமோசனனே போற்றி

97.         ஓம் லக்ஷ்மி நரசிம்மனே போற்றி

98.         ஓம் லோக ரக்ஷகனே போற்றி

99.         ஓம் வஜ்ர தேகனே போற்றி

100.    ஓம் வராக நரசிம்மனே போற்றி

101.    ஓம் வரப்ரத மூர்த்தியே போற்றி

102.    ஓம் வரதயோக நரசிம்மனே போற்றி

103.    ஓம் விலம்ப நரசிம்மனே போற்றி

104.    ஓம் வியாக்ர நரசிம்மனே போற்றி

105.    ஓம் விசுவரூபனே போற்றி

106.    ஓம் வீரவிக்ரம நரசிம்மனே போற்றி

107.    ஓம் விஷ்ணுஸ்வரூபனே போற்றி

108.    ஓம் வெற்றியருள் சிம்மனே போற்றி

 

லட்சுமி நரசிம்மரின் காயத்திரி மந்திரம்

 

ஓம் வ்ஜர நாகாய வித்மஹே

தீஷ்ண தம்ஷ்ட்ரீÖ தீமஹி

தந்நோ நரசிம்ம ப்ரசோதயாத்

 

கடன் தொல்லை நீங்க பின்வரும் சுலோகம் சொல்லவும்

 

தேவதா கார்ய ஸித்யர்த்தம் ஸபா ஸ்தம்ப ஸமுத்பவம்

ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

தேவதைகளின் காரியத்தை ஸாதிப்பதற்காக ஹிரண்யகசிபுவின் சபையில் தூணிலிருந்து வெளிப்பட்டவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை

கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

 

லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வர தாயகம்

ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

 

மகாலக்ஷ்மியை இடப்பாகத்தில் அணைத்துக் கொண்டு, தன்னை வழிபடும் பக்தர்களுக்கு விரும்பிய வரங்களைத் தருபவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

 

ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ராப்ஜாயுத தாரிணம்

ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

 

ஹிரண்யகசிபுவின் குடலை மாலையாக அணிந்தவரும், சங்கம், சக்ரம், தாமரை, ஆயுதம் இவைகளை கைகளில் தாங்கியவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

 

ஸ்மரணாத் ஸ்ர்வ பாபக்னம் கத்ரூஜ விஷ நாசநம்

ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

 

நினைத்த உடனேயே அனைத்து பாபங்களையும் போக்கடிப்பவரும், கொடிய விஷத்தை முறியடிப்பவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

 

ஸிம்ஹாநாதேந மஹதா திக்தந்தி பயநாசனம்

ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

 

மிக பயங்கரமான சிம்ஹத்தின் கர்ஜனையால் எட்டுத் திசையிலும் உள்ள திக்கஜங்களுக்கும் பயத்தை போக்கடிப்பவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

 

ப்ரஹ்லாதவரதம் ஸ்ரீசம் தைத்யேச்வர விதாரணம்

ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

 

பக்தனான ப்ரஹலாதனுக்கு அனுக்ரஹம் செய்தவரும், மஹாலக்ஷ்மியுடன் கூடியவரும், அரக்கர் தலைவனான ஹிரண்யகசிபுவை சம்ஹரித்த மஹாவீரருமான,ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

 

க்ரூரக்ரஹை பீடிதானாம் பக்தாநாம் பயப்ரதம்

ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

 

 

உக்ரமும் கோரமும் உடைய கிரஹங்களால் பீடிக்கப்பட்ட பக்தர்களுக்கு அபயம் அளிப்பவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

 

வேத வேதாந்த யஜ்ஞேசம் ப்ரஹ்மருத்ராதி வந்திதம்

ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே

 

வேதங்கள், உபநிஷதங்கள், யாகங்கள் முதலியவைகளுக்கு தலைவரும், ப்ரம்மா, ருத்ரன் முதலியவர்களால் வணங்கப்பட்டவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.

 

: இதம் படதே நித்யம் ருணமோச ஸம்ஜிதம்அந்ருணீ ஜாயதே ஸ்த்யோ தநம் சீக்ரமவாப் நுயாத்

 

 

யார் இந்த ருணமோசனம் என்ற பெயருடைய ஸ்லோகத்தை தினம் படிக்கின்றாரோ அவர் விரைவிலேயே கடனிலிருந்து விடுபட்டவனாகி மேலும் சகல செல்வத்தையும் அடைவார்

 

 

ஸ்ரீ நரசிம்ம ப்ரபத்தி

மாதா நரசிம்ஹ, பிதா நரசிம்ஹ

ப்ராதா நரசிம்ஹ ஸகா நரசிம்ஹ

வித்யா நரசிம்ஹ, த்ரவிணம் நரசிம்ஹ

ஸ்வாமி நரசிம்ஹ ஸகலம் நரசிம்ஹ

இதோ நரசிம்ஹ பரதோ நரசிம்ஹ,

யதோயதோ யாஹி: ததோ நரசிம்ஹ,

நரசிம்ஹ தேவாத் பரோ கஸ்சித்

தஸ்மான் நரசிம்ஹ சரணம் ப்ரபத்யே

 

 

நரசிம்ம பிரபத்தி மந்திரம் தமிழ்:

நரசிம்மரே தாய்: நரசிம்மரே தந்தை:

சகோதரனும் நரசிம்மரே: தோழனும் நரசிம்மரே:

அறிவும் நரசிம்மரே: செல்வமும் நரசிம்மரே:

எஜமானனும் நரசிம்மரே: எல்லாமும் நரசிம்மரே:

இவ்வுலகத்தில் நரசிம்மரே! அவ்வுலகத்திலும் நரசிம்மரே:

எங்கெங்கு செல்கிறாயோ! அங்கெல்லாம் நரசிம்மரே:

உம்மை காட்டிலும் உயர்ந்தவர் எவரும் இல்லை!! நரசிம்மரே! உம்மைச் சரணடைகின்றேன்.


நரசிம்மருக்குரிய பாசுரங்கள்


எந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன்

ஏழ்படி கால் தொடங்கி,

வந்து வழிவழி ஆட் செய்கின்றோம். திரு

வோணத் திரு விழாவில்

அந்தியம் போதிலரியுரு வாகி  

அரியை யழித்தவனை,

பந்தனை திருப்பல் லாண்டு பல்லாயிரத்

தாண்டென்று பாடுதுமே



பூதமைத் தொடு வேள் வியைந்து 

புலன்களைந்து பொறிகளால்,

ஏதமொன்று மிலாத வண்மையி

னார்கள் வாழ் திருக் கோட்டியூர்,

நாதனை நரசிங்கனை நவின்

றேத்துவார் களுழக்கிய,

பாத தூளி படுதலாலிவ்

வுலகம் பாக்கியம் செய்ததே.


பள்ளியி லோதி வந்த தன் சிறுவன்

வாயிலோ ராயிர நாமம்.

ஒள்ளிய வாகிப் போத வாங்கதனுக்

கொன்று மோர் பொறுப்பிலனாகி ,

பிள்ளையாச் சீறி வெகுண்டு தூண்புடைப்பப்

பிளையெயிற் றனல் விழிப் பேழ்வாய்,

தெள்ளிய சிங்க மாகிய தேவைத்

திருவல்லிக் கேனிக் கண்டேனே