Followers

Tuesday, October 22, 2019

முருகன் ஸ்லோகங்கள்



சுப்பிரமணியர்  விருத்தம்

எத்தனை  கவியதும்  பாடியும்  தேடியும்
    இரங்காத  வாறு  மேது
ஏழைக்  கிரங்குவது  சரவணப்பெருமா
    ளிருக்கிறு  ரென்று  உரையும்
சித்தர்முதல்  வாக்கியம்  கூறியது  பொய்யோ
    சிவசுப்ர  மண்ய  நாதா
தென்பொதிகை  மாமுனிக்குபதேசம்  அன்றுநீ
    செப்பியதும்  யானறிகு  வேன்
முத்தனே  முதல்வனே  முடியனே  அடியேனை
    முன்னின்று  கார்க்க  வாவா
முச்சுடர்க்  குரியதிரு  நாதனே  வேதனே
    முப்புராதி  அன்பர்  குருவே
சப்தரிஷி  மாதவா  தாதவா  கீதவா
    தமிழ்பாடும்  வாக்கு  முதறே
தரணிதனில்  மயில்மீதில்  விளையாடி  வருகின்ற
    சண்முகக்  குமர  குருவே .
ஆரா  ரிருக்கினும்  என்கவலை  மாற்றுவது
    ஆறுமுகக்  கடவு  ளென்று
அவனிமுதல்  அன்பத்தி  அறுகாத  தேசமும் 
    அறியாத  வாறு  முண்டோ
ஈராறு  கையனே  இருமூன்றுமுடியனே
    இனியகனி  வாயழ  கனே
எட்டெட்  டறுபத்தி  நாலனே  தோளனே
    ஏககண  போக  மான .
காராரு  மேனிகரி  முகவனுக்  கிளையனே
    கழுகாசல  ஆறு  முகனே
கற்றறி  உற்றனே  சித்தப்பிர  சித்தனே
    கந்தப்ப  னாதி  வேதி
தாராரு  மையனே  னுய்யனே  ஐய்யனே
    சரிசரி  வரவே  ணுமே
தரணிதனில்  மயில்மீதில்  விளையாடி  வருகின்ற
     சண்முகக்  குமர  குருவே




ஸ்ரீ   குக   பஞ்சரத்னம்

         ( இந்த    ஸ்ரீ   குக   பஞ்சரத்னத்தை   சொல்வதால்   முருகனருள்  பூரணமாக கிடைக்கும் )

ஓம்கார
   நகரஸ்த்தம்   தம்   நிகமாந்த   வனேஸ்வரம் |
நித்ய   மேகம்   சிவம்   சாந்தம்   வந்தே   குஹம்   உமாசுதம் ||

வாசாம   கோசரம்   ஸ்கந்தம்   சிதுத்யான   விஹாரிணம் |
குருமூர்த்திம்   மஹேசானம்   வந்தே   குஹம்   உமாசுதம் ||

ஸச்சிதானந்த   ரூபேசம்   ஸம்ஸாரத்வாந்த   தீபகம் |
சுப்ரஹ்மண்யம்   அனாத்யந்தம்   வந்தே    குஹம்   உமாசுதம் ||

ஸ்வாமிநாதம்   தயாசிந்தும்   பவாப்தேஹ   தாரகம்   ப்ரபும் |
நிஷ்களங்கம்   குணாதீதம்   வந்தே   குஹம்   உமாசுதம் ||

நிராகாரம்   நிராதாரம்   நிர்விகாரம்   நிராமயம் |
நிர்த்வந்தவம்      நிராலம்பம்   வந்தே   குஹம்   உமாசுதம் ||



எதிர்த்து   நிற்கும்   எதனையும்   தகர்த்து , விரோதிகளை   வீழ்த்தும்   வல்லமை   மிக்க  வேலன்   கை   வேல்

வீரவேல்  தாரைவேல்  விண்ணேர்   சிறை   மீட்ட
தீரவேல்  செவ்வேள்   திருக்கைவேல் - வாரி
குளித்தவேல்  கொற்றவேல்   சூர்மார்பும்   குன்றும்
துளைத்தவேல்   உண்டே துணை   







    

Friday, October 18, 2019

லக்ஷ்மி குபேர மந்திரங்கள்


தீபாவளி அன்று சொல்லவேண்டிய
மஹாலக்ஷ்மி  ஸ்லோகம்

ஓம் நமோ லக்ஷ்மியை மஹாதேவ்யை பத்மாயை சததம் நமஹ
நமோ விஷ்ணு விலாசின்யை பத்மஸ்தாயை நமோ நமஹ
த்வம் சாஷாத் ஹரி வக்ஷஸ்தா சிரே ஜ்யேஷ்டா வரோத்பலா
பத்மாட்சி பத்ம ஸம்சாதநா பத்ம ஹஸ்தா பராமயீ
பரமானந்தா அபாங்கீ ஹ்ருத ஸம்ஸ்ருத துர்கதி
அருணா நந்தினி லக்ஷ்மி; மகாலக்ஷ்மி த்ரிசக்திகா
சாம்ராஜ்யா ஸர்வசுகதா நிதிநாதா நிதிப்ரதா  
  
லக்ஷ்மி காயத்ரி

ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்மியை ச  வித்மஹே விஷ்ணு பத்ன்யை    தீமஹி
தந்நோ லக்ஷ்மி ப்ரசோத யாத். (Chant 32/108 times)


ஸ்ரீ மஹாலக்ஷ்மி மந்திரம்

1. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஐம் ஸௌம் ஜகத் ப்ரஸுத்யை நமஹ
(Chant 32/108 times)

2. ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்மியை நமஹ (Chant 32/108 times)

லக்ஷ்மி குபேர மந்திரம்

ஓம் ஸ்ரீம் க்லீம் லக்ஷ்மி குபேராய நமஹ (Chant 32/108 times)

குபேர காயத்ரி

ஓம் யக்ஷராஜாய வித்மஹே வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேர ப்ரசோதயாத்(Chant 32/108 times)

குபேர மந்திரம்

ஓம் யக்ஷாய குபேராய வைஸ்ரவணாய !
தநதாந்யாதிபதயே தநதாந்ய ஸம்ருத்திம் மே
தேஹி தாபய ஸ்வாஹா !!

குபேர த்யான ஸ்லோகம்

மநுஜ வாஹ்ய விமாந வரஸ்திரம்
கருடரத்ந நிபம் நிதிதாயகம் !
ஸிவஸகம் முகுடாதி விபூஷிதம்
வரகதம் தநதம் பஜ துந்திலம் !!

                                                     தன்வந்திரி மந்திரம் 

ஓம் நமோ பாவதே வாசுதேவாய தன்வந்த்ரயே 
அம்ருத கலச ஹஸ்தாய ஸர்வாமய விநாசனாய 

த்ரைலோக்ய நாதாய ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹ 

மகாலக்ஷ்மி போற்றி

ஓம் அன்ன லக்ஷ்மி போற்றி
ஓம் அம்ச லக்ஷ்மி போற்றி
ஓம் அமிர்த லக்ஷ்மி போற்றி
ஓம் அஷ்ட லக்ஷ்மி போற்றி
ஓம் ஆனந்த லக்ஷ்மி போற்றி
ஓம் ஆதி லக்ஷ்மி போற்றி
ஓம் இஷ்ட லக்ஷ்மி போற்றி
ஓம் ஈகை லக்ஷ்மி போற்றி
ஓம் உத்தமி லக்ஷ்மி போற்றி
ஓம் எளிய லக்ஷ்மி போற்றி
ஓம் ஏகாந்த லக்ஷ்மி போற்றி
ஓம் கிரக லக்ஷ்மி போற்றி
ஓம் சந்தான லக்ஷ்மி போற்றி
ஓம் கந்த லக்ஷ்மி போற்றி
ஓம் சிங்கார லக்ஷ்மி போற்றி
ஓம் சீதா லக்ஷ்மி போற்றி
ஓம் சூரிய லக்ஷ்மி போற்றி
ஓம் செந்தாமரை லக்ஷ்மி போற்றி
ஓம் செல்வ லக்ஷ்மி போற்றி
ஓம் சேர்திரு லக்ஷ்மி போற்றி
ஓம் சொர்ண லக்ஷ்மி போற்றி
ஓம் சொருப லக்ஷ்மி போற்றி
ஓம் சௌந்தர்ய லக்ஷ்மி போற்றி
ஓம் ஞானலக்ஷ்மி போற்றி
ஓம் தன லக்ஷ்மி போற்றி
ஓம் தான்ய லக்ஷ்மி போற்றி
ஓம் தைரிய லக்ஷ்மி போற்றி
ஓம் பரவச லக்ஷ்மி போற்றி
ஓம் பாக்கிய லக்ஷ்மி போற்றி
ஓம் பிரகாச லக்ஷ்மி போற்றி
ஓம் பீதாம்பர லக்ஷ்மி போற்றி
ஓம் புண்ணிய லக்ஷ்மி போற்றி
ஓம் பூர்வ லக்ஷ்மி போற்றி
ஓம் பொன்மகள் லக்ஷ்மி போற்றி
ஓம் பெருமைசேர் லக்ஷ்மி போற்றி
ஓம் பைங்கொடி லக்ஷ்மி போற்றி
ஓம் மங்கள லக்ஷ்மி போற்றி
ஓம் மகா லக்ஷ்மி போற்றி
ஓம் மாதவ லக்ஷ்மி போற்றி
ஓம் மாங்கல்ய லக்ஷ்மி போற்றி
ஓம் மாசிலா லக்ஷ்மி போற்றி
ஓம் புண்ணிய லக்ஷ்மி போற்றி
ஓம் பூமகள் லக்ஷ்மி போற்றி
ஓம் மூல லக்ஷ்மி போற்றி
ஓம் மோகன லக்ஷ்மி போற்றி
ஓம் வடிவுடை லக்ஷ்மி போற்றி
ஓம் வரலக்ஷ்மி போற்றி
ஓம் விசால லக்ஷ்மி போற்றி
ஓம் விஜய லக்ஷ்மி போற்றி
ஓம் விஷ்ணு லக்ஷ்மி போற்றி
ஓம் வீர லக்ஷ்மி போற்றி
ஓம் வெங்கட்ட லக்ஷ்மி போற்றி
ஓம் வைர லக்ஷ்மி போற்றி
ஓம் வைகுண்ட லக்ஷ்மி போற்றி
ஓம் நளின லக்ஷ்மி போற்றி
ஓம் நாராயண லக்ஷ்மி போற்றி
ஓம் நாக லக்ஷ்மி போற்றி
ஓம் நித்திய லக்ஷ்மி போற்றி
ஓம் நீங்காத லக்ஷ்மி போற்றி
ஓம் நேச லக்ஷ்மி போற்றி
ஓம் ரத்தின லக்ஷ்மி போற்றி
ஓம் ராம லக்ஷ்மி போற்றி
ஓம் ராஜ லக்ஷ்மி போற்றி
ஓம் ரெங்க லக்ஷ்மி போற்றி
ஓம் ருக்மணி லக்ஷ்மி போற்றி
ஓம் ஜானகி லக்ஷ்மி போற்றி
ஓம் ஜெய லக்ஷ்மி போற்றி
ஓம் ஜோதி லக்ஷ்மி போற்றி
ஓம் கஜ லக்ஷ்மி போற்றி
ஓம் ஜீவ லக்ஷ்மி போற்றி
ஓம் அருள் கொடுக்கும் லக்ஷ்மி போற்றி
ஓம் பொருள் கொடுக்கும் லக்ஷ்மி போற்றி
ஓம் இருள் தீர்க்கும் லக்ஷ்மி போற்றி
ஓம் மருள் தீர்க்கும் லக்ஷ்மி போற்றி
ஓம் பொறுமை கொடுக்கும் லக்ஷ்மி போற்றி
ஓம் வறுமை தீர்க்கும் லக்ஷ்மி போற்றி
ஓம் குறை தீர்க்கும் லக்ஷ்மி போற்றி
ஓம் அறம் வளர்க்கும் லக்ஷ்மி போற்றி
ஓம் மறம் காக்கும் லக்ஷ்மி போற்றி
ஓம் உடல் காக்கும் லக்ஷ்மி போற்றி
ஓம் காரிய சித்தி லக்ஷ்மி போற்றி போற்றி

ஸ்ரீ மகாலக்ஷ்மி துதி

திருமிகு பீடம் தன்னில்
திகழ்ந்திடு திருவே உந்தன்
திருக்கரம் அபயம் மற்றும்
திருவினை வரதம் நல்கும்
மருமலி மற்றைக் கைகள்
மாண்புடைச் சங்கு சக்ரம்
மறுவரு கதையும் கொள்ளும்
மகாலக்ஷ்மி போற்றி போற்றி .
அனைத்துல கெல்லாம் ஈன்றாள்
அதனை எல்லாம் அறிந்தாள்
அனைத்துள வரங்கள் யாவும்
அளித்திட வல்லாள் அன்னை
அடங்கிடாத் துட்டர் தம்மை
அலமறச் செய்யும் சக்தி
ஆன்றவை நல்கும் அன்னை
மகாலக்ஷ்மி போற்றி போற்றி
மகத்துவ மிக்க தாகி
மன்னிடும் சித்தி புத்தி
இகத்தினில் போக பாக்யம்
இனியன தருத லோடே
முகமலர்ந் தின்ப மாக
முக்தியும் ஈயும் அன்னை
மகாமந்ர ரூப சக்தி
மகாலக்ஷ்மி போற்றி போற்றி
தேவியின் பீடம் பத்மம்
திருப்பரம் பொருளின் ரூபம்
தேவியே உலகின் தாயாம்
தேன்பர மேஸ்வரியாம்
ஆவிநேர் அவளை நந்தம்
அகமெல்லாம் உறையும் நண்பை
மாமலர்த் தூபம் கொண்டே
மகாலக்ஷ்மி போற்றி செய்வாம்
தூய செம் பட்டின் ஆடை
தூயவள் தாயும் பூண்டாள்
ஆயபல் லாபர ணங்கள்
அலங்கார மாகப் பெற்றாள்
பூவதின் இருப்பும் தாயே
பூமியின் விருப்பும் தாயே


இந்திர  வழிபாடு

21  நாமாவளிகளை  கூறி  அர்ச்சிக்க  வேண்டும்

ஓம்  இந்திராய  நமஹ
ஓம்  மகேந்திராய  நமஹ 
ஓம்  தேவேந்திராய  நமஹ
ஓம்  விருத்ராதயே  நமஹ
ஓம்  பங்கசாசநாய  நமஹ
ஓம்  ஐராவத வாகனாய  நமஹ
ஓம்  கஜாசன  ரூபாய  நமஹ                                     
ஓம்  பிடௌஜஸே  நமஹ
ஓம்  வஜ்ரபாணயே  நமஹ
ஓம்  சகஸ்ராக்ஷாய  நமஹ
ஓம்  சுபதாய  நமஹ
ஓம்  சதமகாய  நமஹ 
ஓம்  டிரந்தராய  நமஹ
ஓம்  தேவேசாய  நமஹ
ஓம்  சசிபதயே  நமஹ
ஓம்  த்ரிலோகேசாய  நமஹ
ஓம்  தேவேசாய  நமஹ
ஓம்  போகப்ரியாய  நமஹ
ஓம்  ஜகத்ப்ரபவே  நமஹ
ஓம்  இந்திரலோக  வாசினே  நமஹ
ஓம்  இந்திராணி  சகித  இந்திர  மூர்த்தியே  நமஹ
 நானாவித  பரிமள  மந்த்ர  புஷ்பாணி  சமர்ப்பயாமி

இந்திர  காயத்ரீ

ஓம்  வஜ்ரஹஸ்தாய  வித்மஹே  ஸஹஸ்ராக்ஷாய  தீமஹி
தந்நோ  இந்திரப்ரசோதயாத்

குபேரன்-108-போற்றி

  1. அளகாபுரி அரசே போற்றி
  2. ஆனந்தம் தரும் அருளே போற்றி
  3. இன்பவளம் அளிப்பாய் போற்றி
  4. ஈடில்லாப் பெருந்தகையே போற்றி
  5. உகந்து அளிக்கும் உண்மையே போற்றி
  6. ஊக்கம் அளிப்பவனே போற்றி
  7. எளியோனுக்கு அருள்பவனே போற்றி
  8. ஏழ்மை நிலை அகற்றுவாய் போற்றி
  9. ஐஸ்வர்யம் அளிப்பவனே போற்றி
  10. ஒன்பது நிதி பெற்றவனே போற்றி
  11. ஓங்கார பக்தனே போற்றி
  12. கருத்தில் நிறைந்தவனே போற்றி
  13. கனகராஜனே போற்றி
  14. கனகரத்தினமே போற்றி
  15. காசு மாலை அணிந்தவனே போற்றி
  16. கிந்நரர்கள் தலைவனே போற்றி
  17. கீர்த்தி அளிப்பவனே போற்றி
  18. கீரிப்பிள்ளைப் பிரியனே போற்றி
  19. குருவாரப் பிரியனே போற்றி
  20. குணம் தரும் குபேரா போற்றி
  21. குறை தீர்க்கும் குபேரா போற்றி
  22. கும்பத்தில் உறைபவனே போற்றி
  23. குண்டலம் அணிந்தவனே போற்றி
  24. குபேர லோக நாயகனே போற்றி
  25. குன்றாத நிதி அளிப்பாய் போற்றி
  26. கேடதனை நீக்கிடுவாய் போற்றி
  27. கேட்டவரம் அளிப்பவனே போற்றி
  28. கோடி நிதி அளிப்பவனே போற்றி
  29. சங்க நிதியைப் பெற்றவனே போற்றி
  30. சங்கரர் தோழனே போற்றி
  31. சங்கடங்கள் தீர்ப்பவனே போற்றி
  32. சமயத்தில் அருள்பவனே போற்றி
  33. சத்திய சொரூபனே போற்றி
  34. சாந்த சொரூபனே போற்றி
  35. சித்ரலேகா பிரியனே போற்றி
  36. சித்ரலேகா மணாளனே போற்றி
  37. சிந்தையில் உறைபவனே போற்றி
  38. சிந்திப்போர்க்கு அருள்பவனே போற்றி
  39. சீக்கிரம் தனம் அளிப்பாய் போற்றி
  40. சிவபூஜை பிரியனே போற்றி
  41. சிவ பக்த நாயகனே போற்றி
  42. சிவ மகா பக்தனே போற்றி
  43. சுந்தரர் பிரியனே போற்றி
  44. சுந்தர நாயகனே போற்றி
  45. சூர்பனகா சகோதரனே போற்றி
  46. செந்தாமரைப் பிரியனே போற்றி
  47. செல்வ வளம் அளிப்பவனே போற்றி
  48. செம்மையான வாழ்வளிப்பாய் போற்றி
  49. சொர்ணவளம் அளிப்பவனே போற்றி
  50. சொக்கநாதர் பிரியனே போற்றி
  51. சௌந்தர்ய ராஜனே போற்றி
  52. ஞான குபேரனே போற்றி
  53. தனம் அளிக்கும் தயாபரா போற்றி
  54. தான்ய லெட்சுமியை வணங்குபவனே போற்றி
  55. திகட்டாமல் அளித்திடுவாய் போற்றி
  56. திருவிழி அழகனே போற்றி
  57. திருவுரு அழகனே போற்றி
  58. திருவிளக்கில் உறைவாய் போற்றி
  59. திருநீறு அணிபவனே போற்றி
  60. தீயவை அகற்றுவாய் போற்றி
  61. துன்பம் தீர்த்திடுவாய் போற்றி
  62. தூயமனம் படைத்தவனே போற்றி
  63. தென்னாட்டில குடி கொண்டாய் போற்றி
  64. தேவராஜனே போற்றி
  65. பதுமநிதி பெற்றவனே போற்றி
  66. பரவச நாயகனே போற்றி
  67. பச்சை நிறப் பிரியனே போற்றி
  68. பவுர்ணமி நாயகனே போற்றி
  69. புண்ணிய ஆத்மனே போற்றி
  70. புண்ணியம் அளிப்பவனே போற்றி
  71. புண்ணிய புத்திரனே போற்றி
  72. பொன்னிற முடையோனே போற்றி
  73. பொன் நகை அணிபவனே போற்றி
  74. புன்னகை அரசே போற்றி
  75. பொறுமை கொடுப்பவனே போற்றி
  76. போகம்பல அளிப்பவனே போற்றி
  77. மங்கல முடையோனே போற்றி
  78. மங்களம் அளிப்பவனே போற்றி
  79. மங்களத்தில் உறைவாய் போற்றி
  80. மீன லக்னத்தில் உதித்தாய் போற்றி
  81. முத்து மாலை அணிபவனே போற்றி
  82. மோகன நாயகனே போற்றி
  83. வறுமை தீர்ப்பவனே போற்றி
  84. வரம் பல அருள்பவனே போற்றி
  85. விஜயம் தரும் விவேகனே போற்றி
  86. வேதம் போற்றும் வித்தகா போற்றி
  87. வைர மாலை அணிபவனே போற்றி
  88. வைகுண்டவாசப் பிரியனே போற்றி
  89. நடராஜர் பிரியனே போற்றி
  90. நவதான்யம் அளிப்பவனே போற்றி
  91. நவரத்தினப் பிரியனே போற்றி
  92. நித்தியம் நிதி அளிப்பாய் போற்றி
  93. நீங்காத செல்வம் அருள்வாய் போற்றி
  94. வளம் யாவும் தந்திடுவாய் போற்றி
  95. ராவணன் சோதரனே போற்றி
  96. வடதிசை அதிபதியே போற்றி
  97. ரிஷி புத்திரனே போற்றி
  98. ருத்திரப் பிரியனே போற்றி
  99. இருள் நீக்கும் இன்பனே போற்றி
  100. வெண்குதிரை வாகனனே போற்றி
  101. கைலாயப் பிரியனே போற்றி
  102. மனம் விரும்பும் மன்னவனே போற்றி
  103. மணிமகுடம் தரித்தவனே போற்றி
  104. மாட்சிப் பொருளோனே போற்றி
  105. யந்திரத்தில் உறைந்தவனே போற்றி
  106. யௌவன நாயகனே போற்றி
  107. வல்லமை பெற்றவனே போற்றி
  108. குபேரா போற்றி போற்றி

லக்ஷ்ம்யஷ்டோத்தரஶதநாம ஸ்தோத்ரம்

ஓம் ப்ரக்ருத்யை  நமஹ
ஓம் விக்ருத்யை  நமஹ
ஓம் வித்யாயை  நமஹ
ஓம் ஸர்வபூதஹிதப்ரதாயை  நமஹ
ஓம் ஶ்ரத்தாயை  நமஹ
ஓம் விபூத்யை  நமஹ
ஓம் ஸுரப்யை  நமஹ
ஓம் பரமாத்மிகாயை  நமஹ
ஓம் வாசே  நமஹ
ஓம் பத்மாலயாயை  நமஹ
ஓம் பத்மாயை  நமஹ
ஓம் ஶுசயே  நமஹ
ஓம் ஸ்வாஹாயை  நமஹ
ஓம் ஸ்வதாயை  நமஹ
ஓம் ஸுதாயை  நமஹ
ஓம் தந்யாயை  நமஹ
ஓம் ஹிரண்மய்யை  நமஹ
ஓம் லக்ஷ்ம்யை  நமஹ
ஓம் நித்யபுஷ்டாயை  நமஹ
ஓம் விபாவர்யை  நமஹ
ஓம் அதித்யை  நமஹ
ஓம் தித்யை  நமஹ
ஓம் தீப்தாயை  நமஹ
ஓம் வஸுதாயை  நமஹ
ஓம் வஸுதாரிண்யை  நமஹ
ஓம் கமலாயை  நமஹ
ஓம் காந்தாயை  நமஹ
ஓம் க்ஷமாயை  நமஹ
ஓம் க்ஷீரோதஸம்பவாயை  நமஹ
ஓம் அநுக்ரஹபராயை  நமஹ
ஓம் புத்தயே  நமஹ
ஓம் அநகாயை  நமஹ
ஓம் ஹரிவல்லபாயை  நமஹ
ஓம் அஶோகாயை  நமஹ
ஓம் அம்ருதாயை  நமஹ
ஓம் தீப்தாயை  நமஹ
ஓம் லோகஶோகவிநாஶிந்யை  நமஹ
ஓம் தர்மநிலயாயை  நமஹ
ஓம் கருணாயை  நமஹ
ஓம் லோகமாத்ரே  நமஹ
ஓம் பத்மப்ரியாயை  நமஹ
ஓம் பத்மஹஸ்தாயை  நமஹ
ஓம் பத்மாக்ஷ்யை  நமஹ
ஓம் பத்மஸுந்தர்யை  நமஹ
ஓம் பத்மோத்பவாயை  நமஹ
ஓம் பத்மமுக்யை  நமஹ
ஓம் பத்மநாபப்ரியாயை  நமஹ
ஓம் ரமாயை  நமஹ
ஓம் பத்மமாலாதராயை  நமஹ
ஓம் தேவ்யை  நமஹ
ஓம் பத்மிந்யை  நமஹ
ஓம் பத்மகந்திந்யை  நமஹ
ஓம் புண்யகந்தாயை  நமஹ
ஓம் ஸுப்ரஸந்நாயை  நமஹ
ஓம் ப்ரஸாதாபிமுக்யை  நமஹ
ஓம் ப்ரபாயை  நமஹ
ஓம் சந்த்ரவதநாயை  நமஹ
ஓம் சந்த்ராயை  நமஹ
ஓம் சந்த்ரஸஹோதர்யை  நமஹ
ஓம் சதுர்புஜாயை  நமஹ
ஓம் சந்த்ரரூபாயை  நமஹ
ஓம் இந்திராயை  நமஹ
ஓம் இந்துஶீதலாயை  நமஹ
ஓம் ஆஹ்லாதஜநந்யை  நமஹ
ஓம் புஷ்ட்யை  நமஹ
ஓம் ஶிவாயை  நமஹ
ஓம் ஶிவகர்யை  நமஹ
ஓம் ஸத்யை  நமஹ
ஓம் விமலாயை  நமஹ
ஓம் விஶ்வஜநந்யை  நமஹ
ஓம் துஷ்ட்யை  நமஹ
ஓம் தாரித்ர்யநாஶிந்யை  நமஹ
ஓம் ப்ரீதிபுஷ்கரிண்யை  நமஹ
ஓம் ஶாந்தாயை  நமஹ
ஓம் ஶுக்லமால்யாம்பராயை  நமஹ
ஓம் ஶ்ரியை  நமஹ
ஓம் பாஸ்கர்யை  நமஹ
ஓம் பில்வநிலயாயை  நமஹ
ஓம் வராரோஹாயை  நமஹ
ஓம் யஶஸ்விந்யை  நமஹ
ஓம் வஸுந்தராயை  நமஹ
ஓம் உதாராங்காயை  நமஹ
ஓம் ஹரிண்யை  நமஹ
ஓம் ஹேமமாலிந்யை  நமஹ
ஓம் தநதாந்யகர்யை  நமஹ
ஓம் ஸித்தயே  நமஹ
ஓம் ஸ்த்ரைணஸௌம்யாயை  நமஹ
ஓம் ஶுபப்ரதாயை  நமஹ
ஓம் ந்ருபவேஶ்மகதாநந்தாயை  நமஹ
ஓம் வரலக்ஷ்ம்யை  நமஹ
ஓம் வஸுப்ரதாயை  நமஹ
ஓம் ஶுபாயை  நமஹ
ஓம் ஹிரண்யப்ராகாராயை  நமஹ
ஓம் ஸமுத்ரதநயாயை  நமஹ
ஓம் ஜயாயை  நமஹ
ஓம் மங்கலா தேவ்யை  நமஹ
ஓம் விஷ்ணுவக்ஷ꞉ஸ்தலஸ்திதாயை  நமஹ
ஓம் விஷ்ணுபத்ந்யை  நமஹ
ஓம் ப்ரஸந்நாக்ஷ்யை  நமஹ
ஓம் நாராயணஸமாஶ்ரிதாயை  நமஹ
ஓம் தாரித்ர்யத்வம்ஸிந்யை  நமஹ
ஓம் தேவ்யை  நமஹ
ஓம் ஸர்வோபத்ரவவாரிண்யை  நமஹ
ஓம் நவதுர்காயை  நமஹ
ஓம் மஹாகால்யை  நமஹ
ஓம் ப்ரஹ்மாவிஷ்ணுஶிவாத்மிகாயை  நமஹ
ஓம் த்ரிகாலஜ்ஞாநஸம்பந்நாயை  நமஹ
ஓம் புவநேஶ்வர்யை  நமஹ

ஶ்ரீ குபேர அஷ்டோத்தர ஶதனாமாவளி

ஓம் குபேராய நமஹ
ஓம் தனதாய நமஹ
ஓம் ஶ்ரீமதே நமஹ
ஓம் யக்ஷேஶாய நமஹ
ஓம் குஹ்யகேஶ்வராய நமஹ
ஓம் நிதீஶாய நமஹ
ஓம் ஶங்கரஸகாய நமஹ
ஓம் மஹாலக்ஷ்மீனிவாஸபுவே நமஹ
ஓம் மஹாபத்மனிதீஶாய நமஹ
ஓம் பூர்ணாய நமஹ
ஓம் பத்மனிதீஶ்வராய நமஹ
ஓம் ஶங்காக்யனிதினாதாய நமஹ
ஓம் மகராக்யனிதிப்ரியாய நமஹ
ஓம் ஸுகச்சபனிதீஶாய நமஹ
ஓம் முகுந்தனிதினாயகாய நமஹ
ஓம் குண்டாக்யானிதினாதாய நமஹ
ஓம் நீலனித்யாதிபாய நமஹ
ஓம் மஹதே நமஹ
ஓம் வரனிதிதீபாய நமஹ
ஓம் பூஜ்யாய நமஹ
ஓம் லக்ஷ்மீஸாம்ராஜ்யதாயகாய நமஹ
ஓம் இலபிலாபத்யாய நமஹ
ஓம் கோஶாதீஶாய நமஹ
ஓம் குலோதீஶாய நமஹ
ஓம் அஶ்வாரூடாய நமஹ
ஓம் விஶ்வவந்த்யாய நமஹ
ஓம் விஶேஷஜ்ஞாய நமஹ
ஓம் விஶாரதாய நமஹ
ஓம் நலகூபரனாதாய நமஹ
ஓம் மணிக்ரீவபித்ரே நமஹ
ஓம் கூடமந்த்ராய நமஹ
ஓம் வைஶ்ரவணாய நமஹ
ஓம் சித்ரலேகாமன꞉ப்ரியாய நமஹ
ஓம் ஏகபிங்காய நமஹ
ஓம் அலகாதீஶாய நமஹ
ஓம் பௌலஸ்தாய நமஹ
ஓம் நரவாஹனாய நமஹ
ஓம் கைலாஸஶைலனிலயாய நமஹ
ஓம் ராஜ்யதாய நமஹ
ஓம் ராவணாக்ரஜாய நமஹ
ஓம் சித்ரசைத்ரரதாய நமஹ
ஓம் உத்யானவிஹாராய நமஹ
ஓம் ஸுகுதூஹலாய நமஹ
ஓம் மஹோத்ஸாஹாய நமஹ
ஓம் மஹாப்ராஜ்ஞாய நமஹ
ஓம் ஸதாபுஷ்பகவாஹனாய நமஹ
ஓம் ஸார்வபௌமாய நமஹ
ஓம் அங்கனாதாய நமஹ
ஓம் ஸோமாய நமஹ
ஓம் ஸௌம்யாதிகேஶ்வராய நமஹ
ஓம் புண்யாத்மனே நமஹ
ஓம் புருஹூத ஶ்ரியை நமஹ
ஓம் ஸர்வபுண்யஜனேஶ்வராய நமஹ
ஓம் நித்யகீர்தயே நமஹ
ஓம் நீதிவேத்ரே நமஹ
ஓம் லங்காப்ராக்தனநாயகாய நமஹ
ஓம் யக்ஷாய நமஹ
ஓம் பரமஶாந்தாத்மனே நமஹ
ஓம் யக்ஷராஜாய நமஹ
ஓம் யக்ஷிணீவ்ருதாய நமஹ
ஓம் கின்னரேஶாய நமஹ
ஓம் கிம்புருஷாய நமஹ
ஓம் நாதாய நமஹ
ஓம் கட்காயுதாய நமஹ
ஓம் வஶினே நமஹ
ஓம் ஈஶானதக்ஷபார்ஶ்வஸ்தாய நமஹ
ஓம் வாயுவாமஸமாஶ்ரயாய நமஹ
ஓம் தர்மமார்கனிரதாய நமஹ
ஓம் தர்மஸம்முகஸம்ஸ்திதாய நமஹ
ஓம் நித்யேஶ்வராய நமஹ
ஓம் தனாத்யக்ஷாய நமஹ
ஓம் அஷ்டலக்ஷ்மீ ஆஶ்ரிதாலயாய நமஹ
ஓம் மனுஷ்யதர்மிணே நமஹ
ஓம் ஸக்ருதாய நமஹ
ஓம் கோஶலக்ஷ்மீ ஸமாஶ்ரிதாய நமஹ
ஓம் தனலக்ஷ்மீ நித்யவாஸாய நமஹ
ஓம் தான்யலக்ஷ்மீ நிவாஸபுவே நமஹ
ஓம் அஶ்வலக்ஷ்மீ ஸதாவாஸாய நமஹ
ஓம் கஜலக்ஷ்மீ ஸ்திராலயாய நமஹ
ஓம் ராஜ்யலக்ஷ்மீ ஜன்மகேஹாய நமஹ
ஓம் தைர்யலக்ஷ்மீ க்ருபாஶ்ரயாய நமஹ
ஓம் அகண்டைஶ்வர்ய ஸம்யுக்தாய நமஹ
ஓம் நித்யானந்தாய நமஹ
ஓம் ஸுகாஶ்ரயாய நமஹ
ஓம் நித்யத்ருப்தாய நமஹ
ஓம் நிதிதாத்ரே நமஹ
ஓம் நிராஶ்ரயாய நமஹ
ஓம் நிருபத்ரவாய நமஹ
ஓம் நித்யகாமாய நமஹ
ஓம் நிராகாங்க்ஷாய நமஹ
ஓம் நிருபாதிகவாஸபுவே நமஹ
ஓம் ஶாந்தாய நமஹ
ஓம் ஸர்வகுணோபேதாய நமஹ
ஓம் ஸர்வஜ்ஞாய நமஹ
ஓம் ஸர்வஸம்மதாய நமஹ
ஓம் ஸர்வாணிகருணாபாத்ராய நமஹ
ஓம் ஸதானந்தக்ருபாலயாய நமஹ
ஓம் கந்தர்வகுலஸம்ஸேவ்யாய நமஹ
ஓம் ஸௌகந்திகுஸுமப்ரியாய நமஹ
ஓம் ஸ்வர்ணனகரீவாஸாய நமஹ
ஓம் நிதிபீடஸமாஶ்ரயாய நமஹ
ஓம் மஹாமேரூத்தரஸ்தாயனே நமஹ
ஓம் மஹர்ஷிகணஸம்ஸ்துதாய நமஹ
ஓம் துஷ்டாய நமஹ
ஓம் ஶூர்பணகா ஜ்யேஷ்டாய நமஹ
ஓம் ஶிவபூஜரதாய நமஹ
ஓம் அனகாய நமஹ
ஓம் ராஜயோக ஸமாயுக்தாய நமஹ
ஓம் ராஜஶேகர பூஜகாய நமஹ
ஓம் ராஜராஜாய நமஹ
                                                           தமிழ்ப்  பாடல்

"திங்களும் குரு தினமும் வருகின்ற ஓர்தினத்தில் தங்கமும் பவளமும் தரித்த பகுடதாரியை எண்ணி
அக்கினியில் அவன் தாள் நினைத்தாலும் பூசிப்பினும்
இக்கலியில் இந்திர பதவியதும் எட்டுதல் எளிதாமே !"